தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம், வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில், ஹிந்தி சினிமாவைச் சேர்ந்த பிரபல நடிகர் சஞ்சய் தத், முக்கிய வேடத்தில் நடித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் ‘கேஜிஎப் 2’ படத்தில் ‘அதீரா’ என்ற வில்லன் வேடத்தில் மிரட்டலாக நடித்த பின்னர், தமிழில் 'லியோ'வில் வில்லனாக வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கினார். இந்த எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்தாலும், அவரது கதாப்பாத்திரம் திரைப்படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனப் பலரும் கூறியிருந்தனர்.
ஆனால், அதைப் பற்றி நேரடியாக சஞ்சய் தத் இதுவரை பேசாத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஹிந்தி திரைப்பட விழாவில், அவர் கொடுத்த பேட்டியில் 'லியோ' பட அனுபவம் பற்றி பேசும்போது, " தன் திறமையை இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டி இருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் அவர் பேசுகையில், " லியோ படத்தில் எனக்கு பெரிய ரோல் எதுவும் கிடைக்கவில்லை. என் திறமையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சரியாக பயன்படுத்தவில்லை. He wasted me. நான் அதற்காகவே அவர் மீது கொஞ்சம் கோபமாக இருக்கிறேன். ஒரு நடிகரின் திறமையை, அவரது previous performance பாக்கி கொண்டு பயன்படுத்த வேண்டும். KGF 2-ல் நான் செய்ததை எல்லாம் பார்த்துவிட்டு, அதற்கு சமமான அல்லது அதைவிட வலுவான கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதைப் போல இப்படத்தில் வைக்கவில்லை” என அவர் தெரிவித்தார். சஞ்சய் தத் இப்படி பேசியது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

'லியோ' திரைப்படம், ‘லோகி யுனிவர்ஸ்’ எனப்படும் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரம்மாண்டக் கதையோட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகியது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், படத்தின் ஆரம்பத்திலிருந்தே வில்லன்கள் பல கட்டங்களில் வெளிப்படவில்லை. சஞ்சய் தத்தின் கதாப்பாத்திரம், மிகவும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டதோடு, க்ளைமாக்ஸ் பக்கம் வந்து விட்டபின் மட்டுமே ஒரு நேரடி மோதலில் நுழையும் வகையில் இருந்தது. மேலும் பல விமர்சகர்கள், “சஞ்சய் தத் wasted in a glorified cameo” என்று விமர்சித்திருந்தது உண்மை தான். ஆனால் அவர் தற்போது அதை நேரடியாக சொல்லி இருப்பது, லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே சற்று கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நண்பர்கள் முதல் சமூக வலைதளம் வரை அனைத்தும் கட்..! நமக்கு படம் தான் முக்கியம் - லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்..!
இதே நேரத்தில், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் இது ஒரு team-based writing எனவும், படத்தின் ரெகோயர்மெண்ட்ஸ் படி தான் கேஸ்டிங், ஸ்கிரீன் டைம் ஆகியவை முடிவு செய்யப்படுவதாகவும், அவருடைய எண்ணத்தில் சஞ்சய் தத்துக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் விளக்கம் அளித்து வருகின்றனர். ஆகவே, சஞ்சய் தத் அளித்த இந்த விமர்சனம், தமிழக சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை ஒரு நேர்மையான நடிகரின் மனவருத்தமாக பார்ப்பது தவறல்ல. ஆனால், 'லியோ' போன்ற பன்முக இயக்கத்தில், ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் இடம் மற்றும் முக்கியத்துவம் தருவதற்கான கட்டுப்பாடுகளும் இருப்பதையும் மறக்கக்கூடாது.

இனி வரும் காலங்களில் தென்னிந்திய சினிமாவிலும் ஹிந்தி நடிகர்கள் ஈடுபட வேண்டும் என்றால், இது போன்று ஓர் அனுபவம் அவர்களுக்கு மாறுபட்ட சிந்தனைகளை உருவாக்கக் நேரிடும். அதே சமயம், இயக்குநர்களும் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உணர்வுடன் அணுக வேண்டும் என்பதும் இவரது விமர்சனம் முக்கியமான பாடமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக... உலகெங்கும் "கூலி" திரைப்படம்... செம அப்டேட்..!