சினிமாவில் புதிய நடிகர்கள் என எத்தனையோ பேர் வந்தாலும் கமலஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஜீவா, ஆர்யா, சூர்யா ,கார்த்திக், விஷால், தனுஷ் என பல கதாநாயகர்கள் இங்கு வலம் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அவர்தான் ரஜினிகாந்த்.

இவரது திரைப்படங்களுக்கு தியேட்டரில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மவுசு அதிகம். இப்பொழுதும் தொலைக்காட்சிகளில் ரஜினியின் முத்து, படையப்பா, அருணாச்சலம், அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்டா படங்களை ஒளிபரப்பு செய்தாலும் அதனையும் பார்க்கும் கூட்டம் இன்று அதிகம் உள்ளது. குறிப்பாக இவரின் 'படையப்பா' திரைப்படத்தையும் அருணாச்சலம் திரைப்படத்தையும் இணையதளங்களில் தேடி தேடி ஏமாந்து போன கூட்டங்களும் இங்கு அதிகம். ஏனெனில் இந்த திரைப்படங்கள் ஓடிடியிலும் கிடைக்காமல் தொலைக்காட்சிகளிலும் போடப்படாமல் இருப்பதால் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எல்லோரும் போல அவரும் சாதாரணமான நடிகன் தான். ஆனால் ஏன் அவர் மீது மக்கள் இவ்வளவு அன்பை காட்டுகின்றனர் என பார்த்தால் அவரது ஸ்டைலும், அவரது பேச்சுமே இதற்கு காரணம் என்கின்றனர்.
இதையும் படிங்க: சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

இப்படி இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் "கூலி" . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள "கூலி" படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து, தற்பொழுது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது.

இந்த சூழலில் படம் இன்னும் வெளியாக வில்லை என்ற போதிலும் ரஜினியின் இந்த கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பறியுள்ளது. இந்த நிலையில், தற்பொழுது கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 81 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இப்படி இருக்க, இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளிநாட்டில் ஒரு படத்தை வாங்கியது இல்லை. இதன்மூலம் ரஜினி படம் மாபெரும் சாதனையை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது கூலி படத்திற்கான மேலும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் என்ற தனியார் நிறுவனம் ரஜினியின் "கூலி" படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு உண்டான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் மூலம் தகவல்களை கசிந்துள்ளது. அப்படியானால் ரஜினியின் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக போகிறது என ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் 'கூலி' பட பாடல்..! அனிரூத் இசையில் மிரட்டும் சாங் ரிலீஸ்..!