தமிழ் திரையுலகில் பலரது கவனத்தையும் பெற்ற நடிகர் என்றால் அவர் தான் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ரேடியோவில் "ரேடியோ மிர்ச்சி" என்ற நிகழ்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினார். அதனாலயே இவரது பெயரை அனைவரும் மிர்ச்சி சிவா என அழைக்க தொடங்கினர்.

இப்படி தனது முயற்சியால் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனார். இதனை அடுத்து, சரோஜா, தமிழ்ப் படம், வ குவாட்டர் கட்டிங், கோ, கலகலப்பு, தில்லு முல்லு, சொன்னா புரியாது, வணக்கம் சென்னை, யா யா, 144, மசாலா படம், அட்ரா மச்சான் விசிலு, சென்னை 600028 : 2, தமிழ் படம் 2, கலகலப்பு 2, இடியட், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், காசேதான் கடவுளடா, சூது கவ்வும் 2, சுமோ உள்ளிட்ட படங்களில் நடித்து இன்று பலரது மனதிலும் மிகப்பெரிய நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் வெளியாகும் 5 படங்கள்..! இந்த வாரம் என்டர்டைன்மென்டுக்கு நாங்க கேரண்டி..!

இப்படி இருக்க, கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ராமின் அற்புதமான படைப்பில் உருவாகி இருக்கும் தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் திரைப்படம் தான் 'பறந்து போ'. இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க அவரோடு அஞ்சலி கிரேஸ், ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பலரது இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் இத்திரைப்படம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பலரது கவனத்தையும் ஈர்த்த இத்திரைப்படத்தின் மையக் கருத்து என்றால் பெற்றோர்களாக இருப்பவர்கள் குழந்தைகளை வளர்க்க தயாராக இருக்கின்றனரா? அல்லது பெற்றோர்களே குழந்தையாக இருக்கிறார்களா? என்பதை வெளிப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் இருக்கிறது. குறிப்பாக தந்தையினுடைய அன்பை ஆழமாக பிரதிபலிக்கும் திரைப்படமாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் தற்பொழுது மாபெரும் வெற்றி அடைந்திருக்கும் இந்த வேளையில் இத்திரைப்படத்தை நெகிழ்ச்சி பொங்க பேசி பாராட்டி இருக்கிறார் பிரபல இயக்குனர் அட்லீ.

இந்த நிலையில் இப்படத்தை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் அட்லீ, தற்பொழுது வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் "பறந்து போ" திரைப்படம் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான உறவை மிக அழகாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். மேலும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் நெஞ்சை கறையவைக்கும் அளவிற்கு நன்றாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது மிர்ச்சி சிவா மற்றும் அஞ்சலி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. கண்டிப்பாக இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இயக்குனர் ராம் அண்ணாக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் மிர்ச்சி சிவாவின் "பறந்து போ" படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!