தொலைக்காட்சி மற்றும் சமையல் உலகில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார்.
அண்மையில் அவர் மற்றும் ஜாய் கிறிஸ்ட்டில்டாவிற்கு இடையே எழுந்த தனிப்பட்ட உறவு பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தாலும், இன்று ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய பதிவு இந்த விவகாரத்தை புதிய திசைக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த பதிவில் அவர் ரங்கராஜின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தையே வெளிப்படையாகக் குறிப்பிடுவதோடு, ரங்கராஜ் தரப்பில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக “Ragha Rangaraj-வின் அப்பா 5 மாதங்களாக காணவில்லை; DNA test செய்யும்போது தலைமறைவாக உள்ளார்.
இவரை ஏதேனும் event-இல் பார்த்தால் எனக்கு உடனே DM செய்யவும்” என்று அவர் எழுதியிருந்தார். மேலும், “குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; அதனால் தான் ஒளிந்து ஓடுகிறார்” என்ற அவரது கருத்து இணையப் பயனாளர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதோடு, “proof பண்ணினா தான் சார் மாட்டிப்பார்… ஒருவேளை பணம் கொடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல?” என கூறியிருப்பது சூழ்நிலையை இன்னும் சிக்கலாக்கியது.
இதையும் படிங்க: கேப்டன் வாரிசின் மாஸ் படம்..!! கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகிறது ‘கொம்புசீவி’..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

அவர் மேலும் “நீங்க தான் எல்லாமே legal-ல face பண்ணுற ஆள் ஆச்சே, இதை மட்டும் ஏன் உங்களால் face பண்ண முடியல?” என்று ரங்கராஜை நேரடியாக சாடியுள்ளார். இத்துடன் அவர் ரங்கராஜை “Husband #madhampattyrangaraj” என்று குறிப்பிட்டிருப்பதும், இருவரின் உறவு நிலையைப் பற்றி ரசிகர்களிடையே புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பலர் இந்த பதிவை ஆதரித்து கருத்துரைக்க, மற்றொரு பகுதி இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பிரச்சனை என்பதால் பொதுவில் பேசப்பட வேண்டிய விஷயம் அல்ல என்று எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ஜாய் தனது பதிவில் மேலும் “நீங்கள் ஊரையும் ஏமாற்றலாம்… ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் ஏமாற்ற முடியாது. ‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’. செய்த செயல்களுக்கு பலன் உறுதி” என்ற கடுமையான வரிகளுடன் முடித்துள்ளார். இந்த வார்த்தைகளே பதிவை வைரலாக்கிய முக்கிய காரணமாகியுள்ளது. மறுபக்கம், ரங்கராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. அவரின் மௌனம் சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. DNA test குற்றச்சாட்டு மிகவும் கடுமையானதாக இருப்பதால், இது சட்ட ரீதியான கோணங்களையும் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜாயின் குற்றச்சாட்டுகளுக்கு ரங்கராஜ் எவ்வாறு பதிலளிக்கப் போகிறார் என்பதே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை இன்னும் சில நாட்கள் இணையத்தை கலக்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க: அடிக்குது குளிரு.. துடிக்குது தளிரு..! ஹாட் போட்டோ சூட்டால மனசை பற்ற வைத்த திவ்ய பாரதி..!