நடிக்க வருவதற்கு முன்பே சில பிரபலங்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி விடுகிறார்கள்.

அந்த வகையில், பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த, டிக் டாக் மற்றும் டப்ஸ்மேஷ் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகை மிர்னாலினி ரவி.
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் நடிகை மிருணாளினி ரவி..! ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..!

புதுவையை சேர்ந்த இவரின் அழகையும் - திறமையையும் பார்த்து, இயக்குணர் தியாகராஜ குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

சிறிய வேடம் என்றாலும், அதில் பொருந்திய நடித்த இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும், மிர்னாலினி ரவி கடலகொண்ட கணேஷ் என்னும் படத்தில் நடித்தார்.

பின்னர் விஷாலுக்கு ஜோடியாக எனிமி, சசிகுமாருக்கு ஜோடியாக எம்ஜிஆர் மகன், பி ஜாங்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த 'ரோமியோ' திரைப்படம் வெளியானது. அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் மிர்னாலினி ரவி, சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

தற்போது, ட்ரான்ப்ரெண்ட் சேலையில்... கியூட் அழகில் ரசிகர்களை வசீகரிக்கும் விதத்தில் இவர் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் நடிகை மிருணாளினி ரவி..! ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..!