ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி".

இப்படத்தில் மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, ரஜினி முருகன், வேலைக்காரன், கனா, சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, Mr.லோக்கல், ஹீரோ, டாக்டர், ப்ரின்ஸ், டான், மாவீரன், அமரன், அயலான், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ள சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படி இருக்க, உண்மையில் இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் 'எஸ்கே 23" தான். இதற்கு காரணம் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படம் என்பதால் அவரது பிறந்தநாள் அன்று தான் இப்படத்தின் பெயரை வெளியிடுவோம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார் இப்படத்தின் இயக்குனர்.
இதையும் படிங்க: டைட்டில் அப்படித்தான் வைப்போம்.. ஆனா நாங்க தமிழுக்கு எதிரானவங்க அல்ல.. இயக்குனர் கே.பாக்யராஜ் பளீச் பேச்சு..!

அதன் பின், எஸ்கே பிறந்தநாள் அன்று படத்தின் பெயர் "மதராஸி" என கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இப்படத்தின் பெயர் "தில் மதராஸி" என குறிப்பிட்டார். சமீபத்தில் இப்படத்திற்கு 'மதராஸி' என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்து இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்றார். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது,

இப்படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்று பெயர் வைத்த முருகதாஸ், இந்தியில் "தில் மதராஸி" என குறிப்பிட்டு உள்ளது ஏன்? தில் என்றால் மனசு அப்பொழுது "வட இந்தியர்களின் மனதை திருடிய மதராஸி" என்று சொல்ல வருகிறார் போல என நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர். அதன்படி, வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. அந்த தேதியில் மிலாடி நபி விடுமுறை வருகிறது, அதுமட்டுமல்லாமல் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள், ஆக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே ரசிகர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் படத்தை காணலாம் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இப்படி இருக்க, சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தற்பொழுது கிடைத்துள்ளது. அதன்படி, பர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் அனிருத்- சிவகார்த்திகேயன் காம்போவில் வெளியாக உள்ள பர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: என்ன மக்களே பிக்பாஸ் போலாமா..! அதிரடி அறிவிப்பு கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்..!