உலகில் அனைத்து இல்லங்கள் முதல் இறுதியாத்திரை வரை, என்ன...என்ன...பிரச்சனைகள் நடக்கிறதோ..அதேபோல் காதல் முதல் பிரிவு வரை என அனைத்தையும் ஒரே நிகழ்ச்சியின் மூலமாக 100 நாட்கள் காண்பித்து, பலரது வாழ்க்கையை நல்லபடியாகவும் சிலரது வாழ்க்கையை கேள்விக்குறியாகவும் மாற்றி பல யுடியூபர்களை வாழவைக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி, தமிழில் மட்டும் அல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி முதலான மொழிகளில் பல சீசன்களாக வெளிவந்து மக்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழில் பார்த்தால் இதுவரை எட்டு சீசன்கள் முடிந்து உள்ளன. அதில் பிக்பாஸ் முதல் சீசனில் 'ஆரவ்'ம், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரி அர்ஜுனாவும், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகனும், ஆறாவது சீசனில் முகமது அஷீனும், ஏழாவது சீசனில் அர்ச்சனா ரவிசந்திரனும், எட்டாவது சீசனில் முத்துக்குமரன் முதலானோர் வெற்றி பெற்று உள்ளனர்.
இதையும் படிங்க: அப்ப நான் 8 மாத கர்ப்பிணி.. கலா மாஸ்டர் சொன்னதால் நானும் செய்தேன்..! நடிகை ரம்பா ஓபன் டாக்..!

இப்படி பல போட்டியாளர்கள் வந்தாலும் அவர்களை போல தொகுப்பாளர்களும் மாறி வருகின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று முதல் ஏழு சீசன் வரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இனி தான் பிக்பாஸில் தொடரப்போவதில்லை என்றார். அவரை தொடர்ந்து எட்டாவது சீசனில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இறங்கி ஒவ்வொரு வாரமும் சிக்ஸர் அடித்தார். அந்த அளவிற்கு அவரது கௌண்டர் இருந்தது.

இப்படி தமிழ் பிக்பாஸிலே இவ்வளவு மாற்றங்கள் இருக்கும் பொழுது தெலுங்கிலும் மாற்றம் கொண்டுவராமல் இருந்தால் எப்படி. இதுவரை தெலுங்கு முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார், அதன்பின் நானி தொகுத்து வழங்கினார். அவரும் ஒரே சீசனோடு வெளியேற அவரை தொடர்ந்து, 5 சீசன்கள் அக்கினேனி நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில், பிக்பாஸ் 9வது சீசன் நிகழ்ச்சியில் டாப் இளம் நாயகனான விஜய் தேவரகொண்டா தொகுத்து வழங்கப்போவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்திகள் வந்தது. மேலும் சிலர் பிரபல நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவை தொகுப்பாளராக வைத்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என தெரிவித்து வரும் இந்த வேளையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாற்றம் வேண்டாம் வேறொரு அதிரடி மாற்றத்தை கொண்டு வருகிறேன் என தற்பொழுது மாற்றத்தை அறிவித்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

அதன்படி, இதுவரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெள்ளி திரைபிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், இணையதள பிரபலங்களை மட்டுமே அழைத்து வந்து விளையாட வைத்து வருகின்றனர். ஆனால் இந்த முறை அப்படி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சாமானிய மக்களையும் இந்த நிகழ்ச்சியில் போட்டோயாளர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளனர் நிறுவனத்தினர். அதன்படி, விரைவில் தெலுங்கில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 9ன-ன் போட்டியாளராக பொதுமக்களும் வரலாம் எனவும் அதற்கு விண்ணப்பிக்க இணையத்தளத்தையும் தற்பொழுது திறந்து இருக்கின்றனர். அதில் தங்களது வீடியோ உடன் மக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடமும் இந்த தெலுங்கு பிக்பாஸ் ஷோவை நாகார்ஜூனா தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தெலுங்கை போலவே தமிழில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 9ல் இதே போன்ற நடைமுறையை கொண்டு வருவார்களா..? என ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: எங்களை பற்றி சொல்ல நீங்க யாரு..? ஆபாச அவதூறுகளை பரப்பும் பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் வச்ச செக்..!