தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை முருங்கைக்காயை பார்த்தாலே அனைவரது எண்ணத்தில் தோன்றும் ஒரே நடிகர் என்றால் அவர்தான் பாக்யராஜ். அந்த அளவிற்கு இவருடைய திரைப்படத்தை எடுத்தாலே அதில் பல அர்த்தங்கள் மற்றும் காமெடிகள் கலந்து இருக்கும்.

இப்படிப்பட்ட கே.பாக்யராஜ், தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவிடம், 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் முதலிய படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, பாரதிராஜாவின் இரண்டாவது திரைப்படமான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் பாரதிராஜாவின் மூன்றாவது திரைப்படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் உணவு விடுதி பணியாளர் வேடத்தில் வந்து பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த ஒரே நடிகர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.
இதையும் படிங்க: என்ன மக்களே பிக்பாஸ் போலாமா..! அதிரடி அறிவிப்பு கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்..!

இப்படி இவரது திறமையை கண்ட இயக்குனர் பாரதிராஜா அவரது அடுத்த திரைப்படமான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்தது மட்டுமல்லாமல் வசன கர்த்தாவாகவும் மாற்றி பெருமை படுத்தினார். இதனை அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்த பாக்கியராஜ் 'சுவரில்லாத சித்திரங்கள்' என்ற சோகம் கலந்த நகைச்சுவையான திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனை அடுத்து ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, என பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

பின்பு இவரது மாபெரும் வெற்றி படங்கள் என பார்த்தால் அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங்...டார்லிங்... என பல படங்களை சொன்னாலும் 1982 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான "முந்தானை முடிச்சு" திரைப்படம் தான் இன்று வரை பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் என்றே சொல்லலாம். இத்திரைப்படத்தில் தான் நடிகை ஊர்வசி அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் தான் முருங்கைக் காயை பயன்படுத்தி இன்று வரை தனது பெயரை பலரது கவனத்திலும் நிற்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ்.

இப்படி திரையுலகில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாக்கியராஜ் இதுவரை தமிழ் சினிமாவில் பிறரது இயக்கத்திலும் தான் இயக்கியும் நடித்த படங்கள் என பார்த்தால், சிகப்பு ரோஜாக்கள், விதி, அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிகப்பு மனிதன், சின்ன வீடு, வேட்டிய மடிச்சு கட்டு, சுயம்வரம், இயக்குனராக சொர்க்கத்தங்கம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ரெண்டு, நினைத்தாலே இனிக்கும், உத்தமபுத்திரன், இயக்குனராக சித்து பிளஸ் டூ, வாகை சூட வா, பாலக்காட்டு மாதவன், துணை முதல்வர், கணிதன், துப்பறிவாளன், ஆருத்ரா, பொன்மகள் வந்தாள், எழுத்தாளராக முந்தானை முடிச்சு, முருங்கைக்காய் சிப்ஸ், சரக்கு, காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், டாடா, பிடி சார், எனை சுடும் பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இயக்கி இருக்கிறார்.

இப்படி இருக்க, தற்பொழுது பி.டி.அரசகுமார் தயாரிப்பில், இயக்குனர் அருள் அஜித் இயக்கத்தில், ரஜின், ஷிவதா, ரம்யா பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் தயாராக இருக்கும் திரைப்படம் தான் "கயிலன்". விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் விழாவில் இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், " தற்பொழுது வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் தமிழில் பெயர் சூட்டப்படாததை குறித்து கே.ராஜன் போன்ற ஜாம்பவான்கள் ஆதங்கப்படுவதை பார்த்து நானும் சிறிது நேரம் யோசித்தேன். காரணம் என்னவென்றால் நான் இயக்கிய "டார்லிங்...டார்லிங்..." என்ற திரைப்படத்திற்கு நானும் இவ்வாறாகவே பெயர் வைத்திருக்கிறேன் என்ற எண்ணம் என்னிடத்தில் தோன்றியது.

இது ஜனரஞ்சமான துறை என்ற ஒரே காரணத்தினால் ஜனங்கள் இவ்வாறாக தலைப்புகளை வைத்தால் ரசிப்பார்கள் என்று எண்ணத்தில் மட்டுமே அவ்வாறாக பெயர் சுட்டினேன். ஆதலால் நான் எப்பொழுதுமே தமிழுக்கு விரோதமானவன் அல்ல.. உண்மையை சொல்ல வேண்டுமானால் தமிழ் தான் எங்களுக்கு இன்றும் சோறு போடுகிறது. மேலும் அவர் பேசும் பொழுது படங்கள் குறித்து பலர் வன்மத்துடன் விமர்சனங்களை தெரிவித்து வருவதாக ஆதங்கப்பட்டு பேசினார். ஆனால் என்னுடைய கண்ணோட்டம் என்னவெனப் பார்த்தால் நல்ல படங்கள் எதுவாக இருந்தாலும் அதனை விமர்சனங்கள் தடுத்திட முடியாது என்பது தான்.. நீங்கள் என்னதான் அந்த படங்களை தடுக்க முயன்றாலும் அந்த படங்கள் அனைத்தும் ஓடியே தீரும். அதுமட்டுமல்லாமல் நல்ல படங்களை தேவையில்லாமல் விமர்சனமும் செய்ய மாட்டார்கள் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது" என பேசி சென்றார்.

இதனைப் பார்த்த பல நெட்டிசன்கள், எப்படியோ இயக்குனர் பாக்கியராஜ் தனது டார்லிங் படத்திற்கு விளக்கத்தை கொடுத்துச் சென்று விட்டார். எப்பொழுது மணிரத்தினம் சார் தக் லைஃப் திரைப்படத்தை குறித்து விளக்கம் கூறுவார் என பார்க்கலாம் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்ப நான் 8 மாத கர்ப்பிணி.. கலா மாஸ்டர் சொன்னதால் நானும் செய்தேன்..! நடிகை ரம்பா ஓபன் டாக்..!