இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக அம்மனை "உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம்" என பாட்டு பாடி அழைத்த ஒரே சூப்பர் ஹிட் கடவுள் சார்ந்த சிந்திக்க வைக்கும் படம் என்றால் அது தான் "மூக்குத்தி அம்மன்". இப்படம் வருவதற்கு முன் பல எதிர்ப்புகள் வந்தாலும் படம் வெளியான பிறகு பலரது பாராட்டை பெற்றது. இப்படத்தில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது தங்கையிடம் என்ன வேண்டும் என கேட்க, அவர் எனக்கு ஒருநாள் வீட்டு வேளையில் இருந்து லீவ் வேண்டும் என்பதும், இந்த வீட்டில் இருந்து வெளியே செல்ல நினைக்கும் பெண்ணிடம், ஓடி போன உன் அப்பாவுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு என அம்மன் கேட்பதும்,

அம்மன் அழகாக இருப்பார்கள் என கதாநாயகன் கூறுவதும் , கடைசியில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கடவுளிடம் நேரடியாக கேளுங்கள் கண்டிப்பாக கடவுள் அதை செய்வார், ஏமாற்றுபவர்கள் கூறுவதையே கடவுள் கேட்கும் பொழுது நீங்கள் கூறுவதை கேட்க மாட்டார்களா என்ன, என கூறி "உங்களுக்குள் இருக்கும் கடவுளை வெளியே தேடாதிங்க உங்ககளுக்குள் தேடுங்க ஏனென்றால் அதுதான் உங்கள் பெஸ்ட் வர்ஷன்" என அம்மன் மறைந்து போவார். இந்த காட்சிகள் இப்படத்தில் மிரளவைத்தது.
இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்காததற்கு காரணம் இதுதான்..! ஆர்.ஜே.பாலாஜி கூறிய பதிலுக்கு கிடைத்த வெகுமானம்..!

இதனை தொடர்ந்து இப்படம் எப்பொழுது மீண்டும் வரும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 மீண்டும் வருவதாகவும், அதில் நான் இருக்க மாட்டேன் எனவும் கூறினார். எனக்கு பதிலாக என்னை சினிமாவில் அறிமுகம் செய்த எனது குரு சுந்தர் சி இருப்பார். அவர்தான் இரண்டாம் பாகத்திற்கு சரியான ஆள் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து மூக்குத்தி அம்மன் 2, நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான, ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனை உறுதி படுத்தும் வகையில், சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்திற்காக, காண்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உண்மையான கோயில் போன்ற பெரிய கோயில் செட் அமைக்கப்பட்டு இருந்தது.

படம் எடுப்பதற்கு முன்பாகவே தனது மகன்களுடன் ஒரு மாதகாலமாக விரதம் எடுத்து வந்த நயன்தாரா, பயபக்தியின் உச்சத்துக்கே சென்று இப்படப்பிடிப்புக்கான பூஜைக்கு சிவப்பு நிற புடவையில் வந்து அம்மனாகவே காட்சியளித்தார். பின் படத்திற்கான பூஜைகள் நல்ல படியாக நிறைவு செய்தனர். இதனை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடங்கும் பொழுது ரூ. 55 கோடி மேட்டுமே பட்ஜெட் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டி கழித்து பார்த்தால் இப்படத்தின் பட்ஜெட் தற்பொழுது ரூ.112 கோடியாக மாறியுள்ளது எனவும் அந்த அளவிற்கு காட்சிகள் படமாக்கப்படுகிறது எனவும் முத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதில் தற்பொழுது வரை நடிகை நயன்தாரா தனது சம்பளத்தில் பாதி மட்டுமே வாங்கியுள்ளதாகவும் மீதி சம்பளமாக வேண்டாம், படத்தின் லாபத்தில் இருந்து பங்கு கொடுங்கள் என கேட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?