டிராகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆசிர்வாதத்தால் தற்பொழுது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "STR 49" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கயாடு லோஹர்.

இவர் மீது ரசிகர்கள் அன்புகாட்ட அவரது நடிப்பில் வந்த டிராகன் படம் மட்டும் அல்ல, அப்படத்திற்கு பின் வாரம் ஒருமுறை அவர் தவறாமல் இணையத்தில் பதிவிடும் வார்த்தைகளும் காரணம்.
இதையும் படிங்க: இரண்டு ரிலேஷன்ஷிப்பில் கயாடு லோஹர்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

இப்படி டிராகன் திரைப்படத்தின் மூலம் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் கயாடு லோஹர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர்.

அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்த பின், முதலில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவர் படிப்பை முடித்த பின் மாடலிங் பக்கம் செல்ல விருப்பப்பட்டார்.

இதனால் முறையாக மாடலிங்கில் கவனம் செலுத்தி பல மேடைகளை கண்ட கயாடு-க்கு அதன் மூலம் நல்ல அடையாளமும் கிடைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face' என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார்.

அவ்வளவு தான் அதன் பிறகு இவரது முகத்தை பார்த்த இயக்குநர்கள் இவரை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.இதனை அடுத்து, 2021-ம் ஆண்டு 'முகில்பேடே' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கயாடு.

இத்திரைப்படத்தை தொடர்ந்து அந்த ஆண்டிலேயே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பித்தார்.

இதனை அடுத்து இவர் நடித்த டிராகன் படம் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது. மேலும், தற்பொழுது 'இதயமுரளி' படத்திலும் நடித்து வருகிறார் கயாடு லோஹர்.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவின் "STR 49" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!