மலையாள திரையுலகைச் சுற்றி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரம் என்றால் அதுதான் பிரபல நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அபிரித் ஷைன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தான். கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான 'மஹாவீர்யார்' திரைப்படம் எதிர்பார்த்த வகையில் வெற்றிப்பெறவில்லை என்பதுதான் வசூலிலும் பின்தங்கியது. எனவே, அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஷாம்நாஸ் என்பவர், நிவின் பாலி மற்றும் அபிரித் ஷைன் ஆகியே இருவரும் அதில் ரூ.1.90 கோடி மோசடி செய்துள்ளதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில் IPC 406 (பொறுப்புத் துரோகம்) மற்றும் 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் முக்கிய அம்சங்கள் என பார்த்தால், 'மஹாவீர்யார்' படம் வசூலில் தோல்வியடைந்த பிறகு, நிவின் பாலி, தயாரிப்பாளருக்கான நஷ்ட ஈடாக ரூ.95 லட்சம் வழங்க, மேலும் புதிய படம் 'ஆக்ஷன் ஹீரோ பிஜு பாகம் 2'வில் இணை தயாரிப்பாளராக வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். அதற்கேற்றார்ப்போல தயாரிப்பு முன்னேற்றத்தில் ஷாம்நாஸ் தனது நிறுவனமான Indian Movie Makers மூலம் பணம் முதலீடு செய்திருந்தார். பின்னர், படம் நிவின் பாலியின் Pauly Jr. Pictures நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டதால், அவருடைய உரிமைகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், துபாயிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் ரூ.5 கோடியை நிவின் பாலியின் நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிவின் பாலியின் நிறுவனம் தனது சமூக ஊடகத்தில் “Truth will prevail” என்ற தலைப்பில் பதிலளித்து, இது ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட வழக்கு எனவும், இப்புகாரின் நோக்கம் சந்தேகத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 28 முதல் இந்த வழக்கு முறைப்படி விசாரணையில் உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இப்படி இருக்க இந்த வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் கவின் - பிரியங்கா மோகன் கூட்டணியில் புதிய படம்..! படப்பூஜையில் நடந்த சுவாரஸ்யம்..!
தயாரிப்பாளர் ஷாம்நாஸ், பண மோசடி மற்றும் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அபிரித் ஷைன் இருவரும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், நிவின் பாலி – அபிரித் ஷைன் கூட்டணியில் உருவான 'மஹாவீர்யார்' ஒரு தனிச்சிறப்பான சமய சிந்தனையுடன் கூடிய திரைப்படமாக இருந்தாலும், வசூல் தோல்வியால் பல பரிமாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு, மலையாள திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்து வரும் படங்களுக்கு இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து திரைத் துறையினர், ரசிகர்கள் என அனைவரும் பீதியுடன் காத்துக்கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல்ல படத்த பாருங்க.. அப்புறம் விமர்சனம் பண்ணுங்க.. சரியா..! நடிகர் விஷால் காட்டமான பேச்சு..!