"குறி வச்சா.. இறை விழனும்.." அதே போல் தான் பாக்கிஸ்தான் பயங்கர வாதிகள் வச்ச குறிக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தனது பலத்தை காண்பித்துள்ளது. என்றைக்குமே ஒன்று என கொடுத்தால் அதனை இரண்டாக கொடுத்துதான் இந்தியர்களுக்கு பழக்கம். உதாரணத்திற்கு அன்பை ஒன்றாக கொடுத்தால் அதனை இரண்டாக கொடுக்கும் இந்தியர்களை சாஃப்ட் ஆனவர்கள் என எண்ணி பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேரை ஈவு இரக்கம் இன்றி கொல்லப்பட்டனர். இதனால் ஒரு அடிக்கு இந்த முறை ட்ரிபிள் அடி கொடுத்து இந்தியர்கள் யார் என்பதை தீவிரவாத அமைப்புகளுக்கு காண்பிக்க நினைத்த ராணுவம், தனது துல்லியமான தாக்குதலால் பொது மக்களுக்கு சேதம் இல்லாமல் பயங்கரவாதிகளை அழித்து, வெற்றி கண்டுள்ளது.

'ஆப்ரேஷன் சித்தூர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நள்ளிரவு சரியாக 1:44 மணியளவில் பாக்கிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்தப்பட்டது. இதில் முப்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இந்திய ராணுவம் தரப்பில் பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நெல்சன் படத்தில் இணையும் பான் இந்தியா ஸ்டார்..! ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!

இந்த தாக்குதலை குறித்து பார்த்தால், பிரிசிசியன் ஸ்டிரைக் என்று அழைக்கிறார்கள். என்னவெனில் இப்படிப்பட்டதான தாக்குதலில் முதலில் எதிரிகளின் இலக்குகள் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுமாம். பின்பு தரை வழியாக தாக்குதல் நடத்தினால் எப்படி சாத்தியயம். அல்லது வான்வழி தாக்குதல் நடத்த சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை முதலில் வகுக்குமாம். பின்பு தான் தாக்க செல்வார்களாம்.
அதன்படி பார்த்ததால், இந்தியா தனது இலக்கை பொறுமையாக ஆராய்ந்து, அதனை உறுதி செய்த பின்னரே இங்கு இருந்தவாறு பயங்கரவாத அமைப்புகளை தாக்கி அழித்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் பிரதமரின் ஒப்புதலுக்கு பின் தான் வீரர்களுக்கே இந்த தாக்குதல் குறித்து சொல்லப்பட்டு பின் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மக்கள் நாயகனாக இருக்கும் ஜெஆர். என்டிஆர் இந்த தாக்குதலுக்கு தனது எக்ஸ் தளத்தில் " 'ஆப்ரேஷன் சித்தூர்' நமது இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை செய்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கைது செய்யப்படும் ராஜராஜன்; பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி..!