கேங்கர்ஸ் - குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த திரைப்படம் தான் கேங்கர்ஸ். இத்திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நகைச்சுவை காட்சிகளை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் படம் வெற்றி அடைந்துள்ளது. இப்படி இருக்க கேங்கர்ஸ் படம் மே மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

குட் பேட் அக்லி - நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார். இப்படி இருக்க இந்த படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படமும் அமேசான் ஓடிடியில் வருகின்ற மே 8ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: இந்த வாரம் ஓடிடியில் ஆறு படங்கள் ரிலீஸ்..! என்னென்ன படங்கள் தெரியுமா..?

வருணன் - தண்ணீர் கேன் போடுவதில் ஏற்பட்ட சண்டையால் கதாநாயகன் கேங்ஸ்டராக மாறிய வண்ணம் எடுக்கப்பட்ட படம் தான் "வருணன்" திரைப்படம். யாக்கை ஃபிலிம்ஸ் மற்றும் யான் புரொடெக்ஷன் தயாரிப்பில், ஜெயவேல் முருகன் இயக்கத்தில், போபோ சசி இசையில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேம்பிரில்லா, ராதா ரவி, சரண்ராஜ், ஜீவா ரவி, மகேஸ்வரி ஆகியோர் நடிப்பில் மார்ச் 13ம் தேதி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமானது மே 2ம் தேதியான இன்று ஓடிடி தளமான ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது.
இஎம்ஐ - க்ரெடிட் கார்டை பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ நினைத்து அவதிப்படும் நடுத்தர குடும்பங்களுக்காக எடுக்கப்பட்ட படம் தான் "இஎம்ஐ". சபரி ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில், சதாசிவம் சின்ராஜ் இயக்கத்தில் ஸ்ரீநாத் பிச்சை இசையில், சதாசிவம் சின்ராஜ், சாய் தன்யா, பிளாக் பாண்டி, ஆதவன், இயக்குனர் பேரரசு, லொள்ளு சபா மனோகர், ஒ.ஏ.கே.சுந்தர், செந்தில் குமாரி ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி வெளியான தஇத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைம்மில் இன்று வெளியாகியுள்ளது.

லவ், டெத் + ரோபோட்ஸ் - நிர்வாக தயாரிப்பாளரான இயக்குனர் டேவிட் ஃபின்ச்சர் தயாரிப்பில், டிம் மில்லர் இயக்கத்தில், உருவான அனிமேஷன் தொகுப்புத் தொடரான லவ், டெத் + ரோபோட்ஸ், அதன் வரவிருக்கும் நான்காவது சீசனை மே 15 அன்று வெளியாக உள்ளது. இந்த நான்காவது சீசனுக்கான ஒரு சிறிய டீஸர் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.

இதனை பார்த்த பலரும் இந்த தொடரை காண ஆவலாக இருந்த நிலையில் மே 15ம் தேதியன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 11 ஹிட் படங்கள்...! 2025 முழுவதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!