"ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே மாதம் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்தியாவின் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்தது. இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது.
ஆனால் ஒரு பாகிஸ்தான் மக்களையும் இந்தியா தாக்காமல் பயங்கரவாதிகளின் கூடாரங்களையும் அவர்களது பயிற்சி இடங்களை மட்டும் குறிவைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம். மேலும், இந்திய எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. குறிப்பாக இந்த தாக்குதலில் பகவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரது வீடும் பயிற்சியகமும் நான்கு ட்ரோன்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மோசமான சூழல் உருவாகி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.
இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் த்ரிஷா - சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆனால் இந்திய விமானப்படை அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ராணுவம் உடனே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இப்படியான இந்த பதற்றமான சூழலில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வண்ணம் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் முதல் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி பாதுகாப்பு கருதி மக்கள் கூட்டம் சேரவேண்டாம் எனவும் அதிக மக்கள் ஒரே இடத்தில் இருப்பதை போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கமல் ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் முதலானோர் துணை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற 16ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வரும் போர் பதற்றம் காரணமாக, தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழாவை தள்ளிவைக்கிறோம், என கூறி, நடிகர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து, இசை வெளியிட்டு விழா எப்போது நடக்கும் என்கிற புதிய தேதி குறித்த அறிக்கையை விரைவில் வெளியிடுவோம் என அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது வேதனை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவின் "STR 49" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!