தமிழ் சினிமாவின் சமீபத்திய வெளியீடுகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படமாக ‘பராசக்தி’ தற்போது பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வழக்கமான வணிகப் படங்களைத் தாண்டி, சமூக கருத்தும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் இணைந்திருப்பதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.27 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது, சினிமா உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்களிடமும் ‘பராசக்தி’ அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முதல் நாள் முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் தொடர்ச்சியாக நடந்ததாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' ரூட் கிளியர்.. 'பராசக்தி' என்ன பண்ணுமோ..! நெதர்லாந்தில் சிவகார்த்திகேயன் பட திரையிடல்கள் ரத்து..!

திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.51 கோடி ரூபாய் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து, தயாரிப்பாளர், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து கொண்டாடும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில், வெற்றியின் மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் வெளிப்படையாகத் தெரிகிறது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இந்த வெற்றிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், சிவகார்த்திகேயன் நடிப்புக் கெரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய ஓப்பனிங் மற்றும் வசூலை ‘பராசக்தி’ பதிவு செய்துள்ளது என்பதே. இதற்கு முன்பு அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த அளவிலான முதல் நாள் மற்றும் முதல் வார இறுதி வசூல் அவருக்கு புதிது.
குறிப்பாக, குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தியேட்டர்களை நிரப்பி வருவது, படத்தின் நீண்ட ஓட்டத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். ‘பராசக்தி’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதன் வலுவான கதைக்களம் மற்றும் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பு.

வழக்கமாக நகைச்சுவை மற்றும் லைட் ஹீரோ கதாபாத்திரங்களில் காணப்பட்ட சிவகார்த்திகேயன், இந்த படத்தில் உணர்ச்சிப் பூர்வமான, ஆழமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது. பல காட்சிகளில் அவரது நடிப்பு கண்களில் நீர் வரவைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர் சுதா கொங்கரா, தனது வழக்கமான நேர்த்தியான திரைக்கதை, உணர்ச்சிகளை நுட்பமாக கையாளும் வகையில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளார். சமூகத்தில் பேசப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயத்தை, வணிக அம்சங்களோடு சேர்த்து ரசிகர்களுக்கு எளிதாக கொண்டு சென்றிருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, கலை இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளன.
மேலும், வர்த்தக நிபுணர்கள் கணிப்புப்படி, இப்படம் முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாயை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்கள், குடும்ப பார்வையாளர்களின் ஆதரவு ஆகியவை தொடர்ந்து கிடைத்தால், ‘பராசக்தி’ இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ‘பராசக்தி’ என்பது வெறும் வசூல் சாதனை படம் மட்டுமல்ல.. சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், சுதா கொங்கராவின் இயக்கத் திறனை மீண்டும் உறுதிப்படுத்தும் படமாகவும் அமைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த படம் எத்தனை புதிய சாதனைகளை படைக்கப் போகிறது என்பதையே தமிழ் திரையுலகம் ஆவலுடன் கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: பல பிரச்சனைகளுக்கு மத்தியில்.. ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜா குரல்..! தீயாக பரவும் 'பராசக்தி' பட "சேனைக் கூட்டம்" பாடல் ரிலீஸ்..!