பிளாக் பஸ்டர் படங்களின் வாரிசு என்று ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த 'கூலி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாகி வெறும் 2 வாரங்களிலேயே ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து, ஒரு மாபெரும் வணிக வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது.
இப்படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ், அனிருத் இசையமைக்க, கமல்ஹாசன் குரல் மற்றும் போஸ்ட் கிரெடிட் காட்சிகளில் விஜய், சூர்யா ஆகியோரை குறிப்பிட்ட வகையில் சுட்டிக்காட்டும் பாணியில் படம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்க இப்படத்திற்கு சென்சார் வாரியத்தால் 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டவை என்னவெனில், அதிகமான வன்முறை மற்றும் சண்டைக் காட்சிகள், மதுபானம் அருந்தும் காட்சிகள், சில தடையுள்ள வார்த்தைகள் மற்றும் உணர்ச்சி பாதிக்கும் உரையாடல்கள் என இதனால், ரஜினிகாந்தின் பெரும் ரசிகர் வட்டமான பெண்கள் மற்றும் குழந்தைகள், குடும்பத்தோடு படம் பார்க்க முடியாமல் விலகி நின்றனர். பல தியேட்டர்களில், குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை என்பதால், இது வசூல் பாதிப்பு அளிக்கும் நிலைக்கும் வந்தது. இந்த சூழலில், சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து, “படத்தில் உள்ள காட்சிகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் குழந்தைகள் பார்க்கக் கூடிய அளவிற்கு தீவிரமல்ல” என தெரிவித்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் வாதம் என்றால் "பலபேர் குடும்பத்தோடு படம் பார்க்க விரும்புகிறார்கள். படம் சமுதாயத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளிப்பது, சுதந்திரமான கலை அச்சுத் துறையை கட்டுப்படுத்தும் முயற்சி.. மேலும், படம் 'ஏ' சான்றிதழுடன் வெளியானதால் ஏற்பட்ட வர்த்தக இழப்பும், பார்வையாளர்கள் குறைந்ததையும்" குறிப்பிடியுள்ளது.

இதனை அடுத்து வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றம், சென்சார் வாரியத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டது. பின்பு வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டது முடிவில் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்திவைத்தது. இப்படி இருக்க பலர் எதிர்பார்த்தது போல், நீதிமன்றம் இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் அளிக்க உத்தரவிடும் என நினைத்தனர். ஏனெனில், 'கபாலி', 'கைதி', 'விக்ரம்', 'மாஸ்டர்' போன்ற படங்களுக்கும் 'யு/ஏ' வழங்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் இருந்தன. இந்த நிலையில், ஆகஸ்ட் 28-ம் தேதி, வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: ஷுட்டிங் ஸ்பாட்டில் அமீர்கான் செய்த காரியம்..! நடிகை மோனிஷா எமோஷ்னல் ஸ்பீச்..!
சென்னை ஐகோர்ட், சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தன் தீர்ப்பில் நீதிமன்றம், “இப்படத்தில் அதிகமான வன்முறை, மது அருந்தும் காட்சிகள், தவறான வார்த்தைகள் உள்ளன. இவற்றின் தாக்கம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். எனவே, 'கூலி' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் அளிக்க முடியாது” என தீர்ப்பளித்தது. இதன் மூலம், படம் 'ஏ' சான்றிதழுடன் தான் தியேட்டர்களில் தொடர வேண்டும் என சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்குப் பிறகு, சில ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் 'கூலி' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைக்கவில்லை என்பது, தயாரிப்பு நிறுவனத்திற்கு சிறிய பின்னடைவு தான்.

ஆனால், இந்த தீர்ப்பு சென்சார் வாரியம் தன் செயல்பாடுகளில் கச்சிதமாக இருக்கிறது என்பதையும், குழந்தைகளின் மனநலத்துக்கு தீங்கு வரக்கூடாது என்பதையும் நினைவுபடுத்துகிறது. இருப்பினும், ரசிகர்களுக்கிடையே உள்ள எதிர்பார்ப்பு, படம் மீதான ஆவல், வசூல் வெற்றி – இவை அனைத்தும் சேர்ந்து 'கூலி'யை இந்த ஆண்டின் பிரமாண்டமான பொங்கல் படமாக மாற்றி விட்டன.
இதையும் படிங்க: பீடி பத்தவச்சது ஒரு குத்தமா.. கூலி படத்துல ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்த சர்ச்சை - அமீர்கான் ஓபன் டாக்..!