தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்த சம்பவம் என்றால் அதுதான் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம். "அண்ணா அடிக்காதீங்க அண்ணா வலிக்குது அண்ணா என பெண்கள் கதறிய குரல் இன்றும் பலரது நெஞ்சை பதற வைப்பதாகவே உள்ளது. ஒன்பது காட்டு மிராண்டிகளின் கைகளில் சிக்கிய பெண்களின் கதறல் காட்சி தமிழக மக்களின் மனதில் ரணமாக மாறி அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கொடுப்பீர்கள் என்ற குரல் நாடெங்கும் ஒலிக்க துவங்கியது. தற்பொழுது ஆட்சியில் உள்ள மு.கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதே இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்றதால் தான்.

அப்படி பட்ட பலரது ஆதங்கத்தையும் பூர்த்தி செய்துள்ளது இன்றைய தீர்ப்பு. கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 போரையும் இன்று அதிகாலை சேலம் சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் காவல் துறையினர். பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஒரே பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருவது என பல முக்கிய குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 9 பேரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அப்போ த்ரிஷா... இப்போ...? கொடைக்கானலுக்கு விஜயுடன் விமானத்தில் சென்ற அந்த பெண் யார்..?

அதில், குற்றவாளிகளான 9 பேரும் இளம் வயதினர். மேலும், திருமணமாகாதவர்கள்.. அவர்களுடைய எதிர்காலத்தையும், வயதான அவர்களது பெற்றோர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி நந்தினி தேவி அதனை மறுத்து, முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள், நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள், ஐந்தாம் குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை இன்று தமிழகமே கொண்டாடி வரும் வேளையில், நடிகரும் தாவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளத்தில் பெருமையாக தெரிவித்துள்ளார். அதில், "பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்". என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொடைக்கானல் செல்லும் தவெக தலைவர் விஜய்... கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!