கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 போரையும் இன்று அதிகாலை சேலம் சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் காவல் துறையினர். பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஒரே பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருவது என பல முக்கிய குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 9 பேரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அதில், குற்றவாளிகளான 9 பேரும் இளம் வயதினர். மேலும், திருமணமாகாதவர்கள்.. அவர்களுடைய எதிர்காலத்தையும், வயதான அவர்களது பெற்றோர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி நந்தினி தேவி அதனை மறுத்து, முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள்,

நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள், ஐந்தாம் குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை இன்று தமிழகமே கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கரமாக தயாராகும் விஜே சித்துவின் "டயங்கரம்"..! ஆஃபிஸியல் போஸ்டரால் அரண்டு போன ரசிகர்கள்..!

இந்த நிலையில், யுடியூபரும் நடிகரும் இயக்குனருமான விஜே சித்து தனது எக்ஸ் தளத்தில் இந்த தீர்ப்புக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதன்படி அவரது எக்ஸ் தளத்தில் " இது சரியான தீர்ப்பு என குறிப்பிட்டு அதன் கீழ், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். இது உதவப்போகும் யார் அந்த அய்யா @முக.ஸ்டாலின் @உதயநிதி ஸ்டாலின்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜே சித்து இயக்கும் புதிய படம்..! அனௌன்ஸ்மண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!