அந்தப்புரத்து மகராணி என்ற பாடலை இப்பொழுது கேட்டாலும் கார்த்தி மற்றும் ரம்பா ஆடிய அந்த நடனமே நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு அழகிற்கு பெயர் போனவர் நடிகை ரம்பா. இப்படிப்பட்ட ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. ரம்பா நடித்த முதல் படம் 1992ம் ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான "சர்கம்" மற்றும் "சம்பகுளம் தச்சன்"படம். அடுத்து 1993ம் ஆண்டு ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான "ஆ ஒக்கடு அடக்கு" என்ற தெலுங்குப் படத்தில் அங்கு அறிமுகமானார்.

தமிழில், கதிர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது புகழையும் தேடித்தந்தது. இதற்கு பின்பாக தான் ரம்பாவுக்கு "தொடை அழகி" என ரசிகர்கள் பெயர் வைத்து அன்புடன் அழைத்தனர்.இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வந்த ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.
இதையும் படிங்க: எங்களை பற்றி சொல்ல நீங்க யாரு..? ஆபாச அவதூறுகளை பரப்பும் பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் வச்ச செக்..!

இதனை தொடர்ந்து, மூன்று குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இப்படி திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பக்கம் வராதவர் தற்பொழுது மீண்டும் சினிமா துறையில் தனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு முதல்படியாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகக் களமிறங்கி இருக்கிறார். இதுவரை நடிகை ரம்பா உழவன், உள்ளதை அள்ளித்தா, ஜானகிராமன், அருணாச்சலம், தர்ம சக்கரம், நினைத்தேன் வந்தாய், தேசிய கீதம், காதலா காதலா, என்றென்றும் காதல், மின்சார கண்ணா, உனக்காக எல்லாம் உனக்காக, சுயம்வரம், அழகான நாட்கள், சுக்ரன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் பல வருடங்களுக்கு பிறகு தற்பொழுது ரம்பா மீண்டும் சினிமாவில் காம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவரது படம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகினறனர்.

இப்படி அழகிலும் நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் தனி ஆளாக நின்று அனைத்தையும் சாதித்த நடிகை ரம்பா, மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தனது காதல் நிகழ்வுகளை பற்றியும் பிரபல நடன கலைஞரான கலா மாஸ்டர் குறித்தும் தனியார் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். அதில், "தமிழ் சினிமா திரையுலகில் நடனத்தில் வணக்கத்தை எப்படி போட வேண்டும் என்பதை முதன் முதலில் எனக்கு கற்றுக் கொடுத்தவரே கலா மாஸ்டர் தான்... யார் வேண்டுமானாலும் நடனம் ஆடலாம் ஆனால் முதலில் வணக்கம் வைப்பது நடனத்தில் மிகவும் முக்கியம். நான் முதல் முதலில் கலா மாஸ்டரை ஊட்டியில் கிருஷ்ணா சார் படத்தில் தான் பார்த்தேன்.. அந்த நேரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடனமாட ஷெட்டுல் கொடுத்திருந்தார்கள். ஆனால் ஐந்து பாடல்களுக்கு நாங்கள் நடனம் ஆட வேண்டும்.

அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாத பொழுது மாஸ்டர் யார்? என கேட்டேன். அப்பொழுது கலா மாஸ்டர் என சொன்னார்கள்... அவரைக் குறித்து எனக்கு தெரியும். ஆனால் அவருடன் நான் அப்பொழுது வேலை செய்ததில்லை... அந்த ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் ஒவ்வொரு பாடலுக்கும் நான் நான்கு உடைகளை மாற்ற வேண்டும். அங்கு உடைகள் மாற்றும் அறையும் கிடையாது. ஸ்கிரீனை இழுத்து வைத்து தான் உடைகளை மாற்றுவேன்.. நான்கே நாட்களில் 5 பாடலுக்கும் நடனத்தைக் கற்றுக் கொடுத்து அதனை படமாக்கிய ஒரே நடன கலைஞர் கலா மாஸ்டர் மட்டும்தான்.

நிறைய நடன கலைஞர்கள் ப்ரொடியூசர் ஆகட்டும் இயக்குனராகட்டும் அனைவரிடமும் எங்களுக்கு நடனம் ஆட வேண்டுமானால் எங்களுக்கு இந்த பொருட்கள் வேண்டும் கிரேன் வேண்டும் பேக்ரௌண்ட் செட் வேண்டும் என பல நிபந்தனைகளை வைப்பார்கள். ஆனால் கலா மாஸ்டர் அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதனை வைத்து ஒரு நடன செட்டை உருவாக்குவார். எனக்கு திருமணம் ஆனதே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியால் தான். ஏனெனில் எனது கணவர் அதில் தான் என்னை முதன் முதலில் பார்த்தார். அதன் பின் தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்" என தெரிவித்தார்.
அப்பொழுது பேசிய கலா மாஸ்டர், " அப்பொழுது வெளியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் மேரேஜ் ரவுண்ட் நடைபெற்றது.. அதில் நடிகை ரம்பா தாவணி பாவாடை அணிந்து வந்ததை பார்த்து அவரது கணவர் அவர் மீது காதலில் விழுந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் ரம்பாவின் மூன்றாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு நான் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தேன்... அப்பொழுது நான் கனடாவுக்கு போயிருந்தேன் அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தேன் என தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரம்பா, ஆமாம்... அங்கு வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவர், எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் எண்ணையே அங்கு நடனமாட வைத்தார் கலா மாஸ்டர்" என மகிழ்ச்சி பொங்க பேசினார்.

இதனைப் பார்த்த அனைவரும் கலா மாஸ்டர் மற்றும் நடிகை ரம்பாவின் நட்பை ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர்
இதையும் படிங்க: 2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!