தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது படங்கள் அனைத்தும் 100 நாட்களுக்கு குறைவாக திரையரங்குகளில் ஓடியதே இல்லை. அந்த அளவிற்கு இன்றும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. இப்படி இருக்க ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கூறி அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அதுமட்டுமல்லாமல் பிஜேபிக்கு ஆதரவான அவரது அரசியல் பிரச்சாரங்களும் பேச்சுக்களும் மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பையும் அன்பையும் உடைத்ததாக தெரியவர தனது ரசிகர்களுக்காக அரசியல் வேண்டாம் என்று அதிலிருந்து விலகி சென்றார். அரசியலில் இருந்து விலகினாலும் அவ்வப்போது நாடுகளில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளை குறித்தும் பேசி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது ரசிகர்களுக்காக மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: ரஜினியை அலறவிட்ட கேரள ரசிகர்கள்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசியம்..!

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இப்படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும், இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இதனை கண்டு அவரது ரசிகர்கள் ரஒருபுறம் மகிழ்ச்சியில் இருக்க, சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் இயக்கம் தான். இதில் அனிரூத்தின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது.

இப்படி அலப்பறையை கிளப்பும் படம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்க, ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனக்குண்டான முதல் பாகங்களை கோயம்புத்தூரில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தை குறித்து பேசிய யோகி பாபு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது என தெரிவித்தார். பின்னர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். மோகன்லாலிடமும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேசிவருகிறார். இந்த சூழலில் இப்படத்தில் புதியதாக கெஸ்ட் ரோலில் இணைந்திருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்னன். அவர் வரும் சில நிமிட காட்சிகளுக்கு ரூ.50 கோடி ரூபாய் சம்பளமாகவும் கேட்டுள்ளார்.

இப்படி இருக்க ஜெயிலர் 2வில் மீதமுள்ள காட்சிகளை படமாக்கும் பணிகள் கேரளாவில் தொடங்கியுள்ளது. இதற்காக கேரளாவிற்கு சென்ற ரஜினிக்கு சமீபத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அவர்களை தொடர்ந்து, கோழிக்கோட்டில் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது பினராயி விஜயன் மருமகனும் கேரள மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான பி.ஏ.முகமது ரியாஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தார். அப்போது இருவரும் எடுத்த புகைப்படங்களை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவ, கண்டிப்பாக அமைச்சர் மற்றும் ரஜினியுடனான சந்திப்பு அரசியல் ரீதியாக தான் இருக்கும் என பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: களமிறங்கும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா..! ஜெயிலர் 2-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!