இதுவரை தமிழில் ராமாயணம் மகாபாரதம் போன்ற வரலாற்று சிறப்புகளை போற்றும் படைப்புகளை பார்த்து இருப்போம். ஆனால் அதனை தொடர்ந்து வருகிறது "கண்ணப்பா திரைப்படம்". இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் இந்த படம் பெரிதும் வரவேற்புள்ளதாக உள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மிக படம் என்றால் அது "கண்ணப்பா".

காரணம் ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க தயாராகி கடந்த ஆகஸ்ட் 18, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முழுப்படமாக்கப்பட்டு உள்ளது "கண்ணப்பா" திரைப்படம்.
இதையும் படிங்க: மணிரத்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் புதிய படமா..? இயக்குநர் அளித்த ஸ்மார்ட் அப்டேட்..!

இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும்,

பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் அதிரடியாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கிராபிக் காட்சிகள் அடங்கிய முக்கியமான ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டுடியோஸில் இருந்து முக்கியமான கிராபிக்ஸ் அடங்கிய ஹார்ட் டிரைவரை, கொரியர் மூலமாக 'போர் பிரேம்ஸ் ஸ்டுடியோவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பட குழுவினர்.

இந்த நிலையில் திரைப்படத்தில் வருவதை போல் அந்த பார்சலை ரகு என்பவர் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ரகுவிடம் விசாரித்தால் அது சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்ததாக கூறுகிறார். இப்படி மாறி மாறி தெரிவித்து வந்த இவர்கள் தற்பொழுது காணாமல் போக, பதறிப் போன குழுவினர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இப்படம் வெளியாக கூடாது என்பதற்காக யாரோ ஒருவர் திட்டமிட்டு இதனை செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் படத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்திருக்க வேண்டும் என பட குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை தரப்பிலிருந்து சரியான செய்திகள் வந்த பின்பு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவோம் என கூறியுள்ளனர் பட குழுவினர்.
இதையும் படிங்க: சொகுசு கப்பல் காரில் பிறந்த நாளை கொண்டாடிய ஆல்யா மானசா..! சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!