தமிழ் திரையுலகில் கட்டன்ரைட்டாக இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் 2002ம் ஆண்டு வெளியான "காதல் கொண்டேன்" என்ற திரைபடத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே முதலிய படங்களை எழுதி இயக்கி உள்ளார். இவைகளிலும் இவர் இயக்காமல், எழுதி வெளியான படங்கள் என்றால் துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோகினி, மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்கள் எனலாம்.

இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் படங்கள் என்றால் ஒன்று "7ஜி ரெயின்போ காலனி" மறறொன்று "ஆயிரத்தில் ஒருவன்" காரணம் இந்த இருபடங்களும் மிக அற்புதமாகவும் சிந்திக்க கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் 2010ம் ஆண்டு டிரீம் வேலி கார்ப்பரேஷன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ரீமா சென் மற்றும் பல்லாயிரம் துணை நடிக்கர்களை வைத்து உருவான திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்".
இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!

இந்த படம் அப்பொழுது வெற்றி அடையவில்லை என்றாலும் இப்பொழுது இப்படத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், கடந்த 15 அக்டோபர் 2004 ஆம் ஆண்டு வெளியான "7ஜி ரெயின்போ காலனி" திரைப்படத்தில் முதன் முதலாக தோன்றியவர் தான் நடிகர் ரவி கிருஷ்ணா. இவருடன் சோனியா அகர்வால் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். வேலைக்கு செல்லாத மகன், தன் காதலியின் ஊக்கப்படுத்தும் பேச்சால் வேலைக்கு சேர்ந்து, தந்தையின் அன்பை அழகாக காட்டும் அருமையான படமாக இருந்தது.

இத்திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும், வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது.தனது முதல் படத்திலேயே ரவி கிருஷ்ணா தனது அபார நடிப்பை வெளிக்காட்டி, நடிப்பிற்காக பிலிம்பேரின் சிறந்த ஆண் அறிமுக நடிகர் விருதைப் பெற்றார். அதே சமயம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. இத்தனை பெருமைகளுக்கு சொந்தமான இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி மாதம் வெளியானது. இந்த நிலையில் எப்பொழுது செல்வராகவன் படப்பிடிப்பை தொடங்குவார் என அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், சத்தமே இல்லாமல் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி இருந்தார் செல்வராகவன்.

ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்ததான அப்டேட் ஒன்று அதிரடியாக கிடைத்துள்ளது. அதன்படி, 7ஜி ரெயின்போ காலனி படத்தை தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு இடையில் வருகின்ற ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேரள அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்..! அமைச்சர் சந்திப்பால் கலக்கத்தில் கட்சியினர்..!