பார்க்க அழகாவும் சிரிப்பால் மனதை கொள்ளை கொள்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். கதாநாயகியாக படத்தில் நடித்த இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் ரியாலிட்டி ஷோக்களில் வந்த இவரை பிரபலமானவர் என மக்கள் ஏற்று கொண்டனர்.

அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான "ஜோக்கர்" என்ற படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அதனை அடுத்து "ஆண் தேவதை" என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

ஆனால் அவரது துருதஷ்டம் இப்படத்தில் அவருக்கு சிறந்த வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரம்யாவுக்கு 2020ஆம் ஆண்டு சின்னத்திரை தொலைக்காட்சி மூலமாக பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராகவும் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராகவும் இடம்பெற்று இருந்தார்.

இந்த போட்டியில் கோமாளியாக புகழுடன் தனது குறும்பு தனமான விளையாட்டை காண்பித்தும் தனது சமையல் திறமையை காண்பித்தும் அந்த போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார்.

இப்படி இவரை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்த மக்கள் அவரை புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்க, தவளை தன் வாயால் கெடும் என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு அவரே சூனியம் வைத்து கொண்டார்.

அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பலரது வயிறெரிச்சலை வாரி குவித்தார். போதாத குறைக்கு அவரது தம்பியும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நடிகர் ஆரியை புகழ, ஷோ ஹிட்டானது, இவரது இமேஜ் டேமேஜானது.

இந்த சூழலில், மீண்டும் தனது நற்பெயரை பெற, இன்ஸ்ட்டாவில் அதிக புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன், கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையில் யோகா பயிற்சி பள்ளியை வைத்து நடத்திவரும் லோவல் தவான் என்பவரை காதல் திருமணம் செய்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

இதனை குறித்து விசாரிக்கையில், யோகா பயிற்சி செய்ய லோவல் தவானின் பயிற்சி கூடத்திற்கு சென்ற ரம்யாவுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடிப்பெற்றது தெரியவந்தது.

இப்படி இருவரது ஹனிமூன் வாழக்கை நன்றாக ஓடிக்கொண்டிருக்க ரம்யா பாண்டியனின் அம்மா தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், ரம்யா திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டில் இருந்து பல லட்சங்கள் கொடுத்து அதற்கு நகை வாங்கிக்கொள்ளும்படி கூறினார்களாம்.
இதையும் படிங்க: அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!