தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று முக்கியமான இந்திய மொழித் திரையுலகங்களிலும் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகை லிஸ்டில் முதலில் இருப்பவர்தான் ராஷ்மிகா மந்தனா..இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார்.
இப்படி இருக்க, அழகும், திறமையும், அதிகம் கொண்ட ராஷ்மிகா தற்பொழுது தனக்கு பிஸினஸிலும் அதிகளவு திறமை உள்ளது என்பதை காண்பித்து உள்ளார். அதன்படி நடிகை ‘கீர்த்தி சுரேஷ்’ போல் சினிமாவிலும், ‘அலியா பட்’ போல் பிசினஸில் கொடிகட்டி பறக்க முடிவெடுத்துள்ள ராஷ்மிகா, தற்போது “Dear Diary” என்ற பெயரில் பர்ஃப்யூம் பிராண்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது வெறும் ஒரு வணிக முயற்சி மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பயணமென ராஷ்மிகா கூறுகிறார். இந்த அறிவிப்பை தனது சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவரது பதிவில், “இது எனக்கு உண்மையிலேயே... மிகவும், மிகவும், மிகவும் நெருக்கமான ஒன்று. இது வெறும் ஒரு பிராண்ட் இல்லை… ஒரு பர்ஃப்யமும் இல்லை... இது என் உள்ளத்தின் ஒரு துண்டு. வாசனை என்பது என் தனிப்பட்ட வாழ்வில் மிக முக்கியமான இடத்தை கொண்ட ஒன்று... இன்று அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகுந்த உற்சாகத்துடனும், அதே சமயம் மிகவும் பதட்டத்துடனும் இருக்கிறேன். ஆனாலும் உங்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கும் என நம்புகிறேன்... நீங்கள் என்னை விரும்புவதை போல இதையும் விரும்புவீர்கள் என நம்புகிறேன்... Dear Diary-யைப் பாருங்கள்..." என பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அவர் தான் முதலில் ப்ரபோஸ் பண்ணாரு..! பொதுவெளியில் காதலை உடைத்த ராஷ்மிகா மந்தனா..!
ஆகவே இவரது Dear Diary பிராண்ட், லக்ஷரி பர்ஃப்யூம் வகைகளில் ஒன்றாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில், ராஷ்மிகாவின் நெருங்கிய நண்பரான விஜய் தேவரகொண்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா இன்ஸ்ட்டாகிராம் பதிவை கிளிக் செய்து பார்க்கலாம்.
அதில், “So proud of you Rashmika... Go conquer!” எனும் வார்த்தைகள் மற்றும் "Dear Diary" லோகோவுடன் கூடிய புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராஷ்மிகா மந்தன்னா நடித்த “Animal” மற்றும் “Pushpa 2” போன்ற திரைப்படங்களின் வெற்றியால், தற்போது அவரது சம்பளம் 8 முதல் 12 கோடி வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சினிமா வளர்ச்சி மட்டுமல்ல, தனி ஆடையாளத்தை பிசினஸில் உருவாக்கும் நோக்கத்தில் “Dear Diary” என்ற பர்ஃப்யூம் பிராண்ட் மூலம் முன்னேற தயாராகி இருக்கிறார். மிகக் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த ராஷ்மிகா மந்தன்னா, இன்று தொழில் உலகிலும் தனக்கென ஒரு இடத்தை நோக்கி பயணிக்கிறார். “Dear Diary” ஒரு வாசனை மட்டுமல்ல, அவர் சொல்வதைப் போலவே, அவரது வாழ்வின் ஓர் அத்தியாயம்.

அந்த அத்தியாயத்தில் இப்போது ரசிகர்கள், வாடிக்கையாளர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவரையும் ஈர்க்கும் அவரது முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: அவர் தான் முதலில் ப்ரபோஸ் பண்ணாரு..! பொதுவெளியில் காதலை உடைத்த ராஷ்மிகா மந்தனா..!