தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பிரமாண்ட யூனிவர்ஸ் ஒன்றாக உருவெடுத்து வரும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) இல், புதியதாக இணைந்திருக்கும் திரைப்படமாக “பென்ஸ்” உருவாகி வருகிறது. ஜி ஸ்குவாட், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தலைமையிலான நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படம், பக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், மற்றும் முக்கிய வேடங்களில் மாதவன், நிவின் பாலி, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படிப்பட்ட பென்ஸ் திரைப்படம் பல காரணங்களால் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஏனெனில் பக்கியராஜ் கண்ணன் இயக்கம் தான். முன்னதாக ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர். இப்போது லோகேஷ் எழுதிய கதையை தனது சினிமா மொழியில் சொல்ல வருகிறார். கதை என பார்த்தால் லோகேஷ் கனகராஜினுடியது. இது அவருடைய தனித்துவமான ஸ்டைல், தடித்த கதைக்களம், அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு - ஜி ஸ்குவாட்.
இது லோகேஷ் கனகராஜ் துவங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம், இந்த நிறுவனத்தின் முதல் முக்கியமான LCU படமாக உருவாகும் படைப்பு தான் இந்த பென்ஸ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், தனது நடிப்பு வாழ்க்கையின் புதிய கட்டத்தை “பென்ஸ்” மூலம் தொடங்குகிறார். வழக்கமான ஹாரர்-காமெடி கதைகளிலிருந்து விலகி, இந்தப் படத்தில் அவர் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக தோன்றுகிறார்.
இது மட்டுமல்லாமல், லாரன்ஸ் தற்போது “கைதி 2” மற்றும் “விக்ரம் 2” படங்களில் நடிக்க உள்ளதாகவும், இதனூடாக அவர் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்-ல் முக்கிய நாயகனாக வலம் வரப்போகிறார் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்க இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின் பாலி, “ட்வின் ஃபிஷ் வால்டர்” என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது நிவின் பாலியின் தமிழ் திரும்புமுகமாக அமைவது மட்டுமல்ல, ஒரு விசித்திரமான, பைத்தியம் கலந்த வில்லனாக அவரை பார்க்கிற வாய்ப்பு எனும் வகையில் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் இருக்கிறார்கள். வால்டர் எனும் அந்த வில்லனின் பெயர், ஒரு சைக்கோநேட்டிக் கதாபாத்திரம் போலவே சித்தரிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு அதிகம். அதேபோல் மாதவன், தனது பிசியான கால அட்டவணையிலிருந்து இந்தப் படத்திற்கு நேரம் ஒதுக்கியுள்ளார் என்பது, கதைவழியாக இந்த படம் உணர்ச்சிப்பூர்வமான சாயல்களையும், திறமையான கதாபாத்திர வளர்ச்சிகளையும் கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

அவர் பெரும்பாலும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால், “பென்ஸ்” திரைப்படத்தில் அவரது பங்களிப்பு கதையின் திருப்புமுனையை நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது. இப்படியாக சாய் அபயங்கர், தமிழ் சினிமாவில் புதிய பெயராக இருந்தாலும், ‘பென்ஸ்’ படத்தில் அவர் பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு புதிய சுவை தரும் வகையில் இருக்கக்கூடும். லோகேஷ் கனகராஜ், புதிய இசை வண்ணங்களை விரும்புவவர். அதனாலேயே அனிருத் இல்லாத நிலையில் ஒரு புதிய ஒலி அனுபவம் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும். இந்த சூழலில் சமீபமாக தன்னை ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மாற்றிக் கொண்ட நடிகர் ரவி மோகன், இப்போது பென்ஸ் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் ஓர் முக்கிய உறுப்பினராக மாறுகிறார்.
இதையும் படிங்க: ஒரே வார்த்தையால் கெனிஷாவை கண்கலங்க வைத்த ரவி மோகன்..! வைரலாகும் வீடியோ..!
இது அவரது புதிய பாதையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. வேறு எந்த லீக்கான நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரத்தில் கலந்துகொள்வது, குணச்சித்திரத்தில் வித்தியாசம் கொண்டிருக்கும் என்பதற்கான சாத்தியமாய் பார்க்கப்படுகிறது. மேலும் ‘பென்ஸ்’ திரைப்படம், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU)-இல் புதிய கிளையாக அமைக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம், கார்த்தியின் கைதி, தளபதி விஜய்யின் லியோ ஆகிய படங்களுக்குப் பிறகு, ‘பென்ஸ்’ ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடு வரப்போகிறது. இது மனநல மருத்துவம், அரசியல் சதிகள், காவல் துறையின் மறுபக்கம் போன்ற விசயங்களை சுற்றி வரலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அல்லது நவராத்திரி/பொங்கல் காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் அல்லது நவம்பர் மாத வெளியீடாக திட்டமிடப்படலாம். ஆகவே ‘பென்ஸ்’ திரைப்படம், ஒரு வெறும் ஆக்ஷன் படம் அல்ல, ஒரு உணர்ச்சி மிகுந்த, அரசியல் நோக்குள்ள, சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகிறது என வட்டாரங்கள் கூறுகின்றன.

லக்ஷணமான நடிப்பு, புதிய இசை அனுபவம், வித்தியாசமான கதை, வில்லன் வேடத்தில் மீண்டும் ஒரு பயங்கர முகம், எதிர்பார்ப்பை உயர்த்தும் இயக்குநர் கூட்டணி என இவை அனைத்தும் சேர்ந்து ‘பென்ஸ்’ திரைப்படத்தை இந்த ஆண்டின் மிக முக்கியமான திரைப்படமாக மாற்றலாம்.
இதையும் படிங்க: ரவி மோகனுக்கு டைம் சரியில்ல போல.. வாங்கிய கடனுக்கு EMI கட்டல.. ECR சொகுசு பங்களாவிற்கு டார்கெட்..!!