சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) அமைந்துள்ள பிரபல தமிழ் நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை கையகப்படுத்துவதற்கு தனியார் வங்கி மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்களா, ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி வசித்து வந்த இடமாகும், ஆனால் தற்போது அவர்களது விவாகரத்து பிரச்னையைத் தொடர்ந்து இந்த சொத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

நடிகர் ரவி மோகன், இந்த சொகுசு பங்களாவின் பத்திரத்தை அடமானம் வைத்து தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார். இந்தப் பங்களாவை அவரது மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து வாங்கிய நிலையில், கடந்த 10 மாதங்களாக கடன் தவணை (EMI) செலுத்தப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'கேஜிஎப்' பட நடிகர் காலமானார்.. துயரத்தில் கன்னட திரையுலகம்..!!
இதனையடுத்து, வங்கி நிர்வாகம் பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த நோட்டீஸை ரவி மோகன் தரப்பு பெற மறுத்து, வங்கியில் நேரடியாக பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், வங்கி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்தச் சர்ச்சையை பெரிதாக்கியுள்ளன.
அவரது மனைவி ஆர்த்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் தொடர்பில் இருப்பதாகவும், மும்பையில் அவருக்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கிக் கொடுத்ததாகவும் பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். மேலும், கோவாவில் கெனிஷாவின் மருத்துவமனைக்காக 5 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ‘பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்’ என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு படங்களில் நடிப்பதற்காக ரவி மோகனுக்கு ரூ.6 கோடி முன்பணமாக வழங்கியிருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி வேறு படங்களில் நடித்ததாகவும், முன்பணத்தை திருப்பி செலுத்தாததாகவும் குற்றம்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தால் படப்பிடிப்பு தாமதமானதால் ஏற்பட்ட இழப்பிற்காக ரூ.9 கோடி இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து, ரூ.5.9 கோடிக்கு சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அவர் பின்பற்றாததால், அவரது சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சிக்கலான சூழலில், ரவி மோகனின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. வங்கி மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சட்ட நடவடிக்கைகள், அவரது சொகுசு பங்களாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குனரின் பட வாய்ப்பை மறுத்த பகத் பாசில்.. காரணம் இதுதான்..!!