நடிகர் ரவி மோகனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவே மாறி வருகிறது. நன்றாக இருந்த ரவி மோகன் திடீரென ஆர்த்தி ரவியை பிரிய நினைத்து நீதிமன்றத்தில் விவாகரத்திற்கான வழக்கை தொடர்ந்தார். இனி தன்னுடைய வாழ்க்கையில் ஆர்த்தி ரவிக்கு இடமில்லை என்று அறிவித்த அவர், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் ரவி மோகன் ஆர்த்திக்கு துரோகம் செய்கிறார் என்றும் அவரது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இல்லாமல் தன் வாழ்க்கையை குறித்து சுயநலமாக யோசிக்கிறார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஒருபுறம் இப்படி பேசிக் கொண்டிருக்க, அதனைக் குறித்து கவலைப்படாத ரவி மோகன் திடீரென தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற ஆடையில் தோன்றினார். ஜோடி பொருத்தம் அமோகமாக இருக்கும் வகையில் இருவரும் வந்து இறங்கினர். இதனைப் பார்த்தவுடன் அங்கிருந்த கேமராக்கள் திரும்பியதோடு பலரது கண்களும் அவர்கள் மீது திரும்பியது. இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் உடனே ட்ரெண்டாக, ரவி மோகன் பாடகி கெனிஷாவை காதலிக்கிறார் என செய்திகள் வரத் தொடங்கியது.
இதையும் படிங்க: ஆர்த்தி ரவி பசங்க பிச்சையா எடுக்குறாங்க.. கெனிஷா உள்ளாடை தெரிய போட்டா உனக்கு என்ன? ஆவேசத்தில் சுசித்ரா..!

இதனைப் பார்த்து பல நாள் மௌனம் காத்த ரவி மோகனின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, "ஒரு வருடமாக நீங்கள் அனைவரும் என் மீது வைத்த குற்றத்திற்கு நான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்து உலகமே தெரிந்து கொள்ளட்டும் தவறு யார் மீது உள்ளது" என அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து பாடகி கெனிஷாவை, இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நுழைந்து இப்படி ஒரு நல்ல குடும்பத்தையே பிரித்து விட்டாயே என பலரும் வசைபாடி வர, ஒரு கட்டத்தில் கடுப்பான பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவிக்கு பதில் ஒன்றை கொடுத்தார். அதில் "எப்பொழுதுமே ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்க மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும்" என பதிவிட கெனிஷா ரவிமோகனை காதலிப்பது அப்பட்டமாக தெரிந்தது.

இதனை அடுத்து ரவி மோகனுக்காக ஒரு பக்கம் ஆர்த்தி ரவியும் மறுபக்கம் பாடகியும் சண்டையிட்டு கொள்ள, ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக குஷ்பூ, ராதிகா என அனைவரும் குரல் கொடுத்து வந்தனர். இதனைப் பார்த்து கடுப்பான ரவி மோகன் நேற்று தனது அறிக்கையில், என்னமோ அனைவரும் ஆர்த்தி ரவி தான் பாதிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே... உண்மையில் இந்த திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்றால் அது நான் மட்டும்தான். என் பெற்றோரை கூட சந்திக்க முடியாத அளவிற்கு என்னை தனிமைப்படுத்தினார்.
இந்த திருமண வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். என்னுடைய இரண்டு மகன்களை குறித்து யோசித்து தான் நான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் ஆர்த்தி ரவியை விட்டு பிரிய என்ன செய்வது என்று எனக்கு தெரியாத பொழுது என்னுடைய எல்லா கஷ்டங்களிலும் எனக்கு உறுதுணையாக நின்று, அந்த வலியும் வேதனையும் உள்ள வாழ்க்கையிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர் பாடகி கெனிஷா தான்.

என்னுடைய வீட்டை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள், என்னுடைய வாகனத்தை பறித்துக் கொண்டார்கள், என்னுடைய பணங்களை பறித்துக் கொண்டார்கள், வெறும் காலோடு என்னை வெளியே அனுப்பும் பொழுது எனக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூடவே இருந்து பார்த்தவர் பாடகி கெனிஷா மட்டும் தான். அது மட்டுமல்லாமல் எனக்கு உறுதுணையாகவும் தாயாகவும் என்னோடு நின்றது அவர் ஒருவர் மட்டும்தான்.
ஆதலால் நான் ஆர்த்தி ரவியை விட்டு தான் பிரிகிறேனே தவிர, எனது மகன்களை விட்டு அல்ல, அவர்களுக்கு உண்டான எல்லா நிதி உதவிகளையும் நான் செய்து வருகிறேன் என தெரிவித்தார். மேலும் என்னை புரிந்தவர்கள் கெனிஷாவையும் புரிந்து கொள்வார்கள் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்து இருந்தார்.

இதனை பார்த்து சூடான ரவி மோகனின் மாமியார் சுஜாதா, நான்கு பக்கங்களுக்கு தனது மறுப்பை அறிக்கையாக தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ரவிமோகனை நான் பொறுப்பேற்க வைத்தேன் என சொல்லுகிறாரே அவரை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி கடனுக்கான வட்டியை நான் மட்டும் தான் செலுத்தி வருகிறேன். ரவி மோகன் சொல்லும் அடுக்கடுக்கான பொய்கள் அனைத்தும் அவரை தரம் தாழ்த்தி விடுகிறது. அவரை வைத்து நான் படம் எடுக்க ஒருநாளும் நினைக்கவில்லை அவரது ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். அவரை நான் கடனாளியாக்கினேன் என்றாலும், ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ரவி பார்ப்போம்.

வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்றழைக்கும் ரவி மோகனை இந்த சூழலிலும் நான் மகனாகவே நினைக்கிறேன். என் மகளும், ரவி மோகனும் இணைந்து வாழ வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இப்படி அக்கறை காட்டும் என்னை வைத்து சித்திரவதை செய்த மாமியார் என்ற புதிய பட்டத்தை கொடுத்து அந்த வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள்" என அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே வார்த்தையில் ஆர்த்தி ரவியை அழவைத்த பாடகி கெனிஷா..! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்காத ரவிமோகன்..!