என்ன தான் சினிமாவில் குட்டி குஷ்பூ என "நடிகை ஹன்சிகா" அழைக்கப்பட்டாலும், இன்று வரை மக்கள் மனதில் அடுத்த குஷ்பூவாக பார்க்கப்படுபவர் தான் நடிகை சமந்தா. இவரை பற்றி நினைக்காத ஒரு திரைபலமும் இருக்க முடியாது. ரசிகர்களும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகை சமந்தா இந்தியா முழுவதும் ஃபேமஸ். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நடிகை சமந்தாவுக்கும் துக்கம் கலந்த பக்கங்கள் வாழ்க்கையில் அதிகம் உண்டு என்றே சொல்லாம்.

அதற்கு காரணம் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் முதலில் நன்றாக காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னர் தான் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் யார் கண் பட்டதோ என தெரியவில்லை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். இவர்கள் இருவரது பிரிவின் பொழுது நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பு, ரூ.200 கோடி ஜீவனாம்சமாக கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால் அவர் அதனை முற்றிலுமாக வேண்டாம் என நிராகரித்து எனக்கு தேவையானதை என்னால் உருவாக்கி கொள்ள முடியும் என சொல்லி அவர்கள் கொடுக்க வந்த பணத்தை துச்சமாக நினைத்து வேண்டாம் என சொல்லி சென்றார்.
அதன் பின், நீண்ட நாட்களாக சினிமா துறையில் அடியெடுத்து வைக்காமல் விலகி இருந்த சமந்தா தற்பொழுது பல படங்களில் நடித்து வருவதுடன், அனுபமா நடித்து வரும் "பர்தா" படத்தில் பெண்களுக்கு கருத்து சொல்லும் சிறப்பு காட்சியில் நடித்தும் உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..!

இப்படி பட்ட சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா". இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் என மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது. இப்படி பல படங்களில் நடித்து கடைசியாக புஷ்பாவில் "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியிருப்பார்.

இப்படி இருக்க, கடந்த சில நாட்களாக பல மேடைகளை சந்தித்து வரும் சமந்தா, அனைவருக்கும் தன் வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்து வருவதுடன், மக்கள் தன் மீது வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் குறித்து கண்ணீர்மல்க கூறி வருகிறார். மேலும், தற்பொழுது ரூ.1200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ஹிட் இயக்குனர்களின் இரண்டு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகை சமந்தா படங்களில் பிசியாக உள்ளார்.

அப்படி பல மேடைகளை கண்ட சமந்தா, தற்பொழுது விருது வழங்கும் மேடையில் பேசிய விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் "என்னுடைய சினிமா கெரியரில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது என்றே தான் நான் நினைக்கிறேன். ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புதான் என்னுடைய மிகப்பெரிய பெரிய பலம். காவிரி படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரனை பற்றி தெரியுமா, நான் நோய்வாய்ப்பட்டு ஒன்றரை வருடம் இருந்த காலத்தில் அவர் மட்டும் தான் காலை, மாலை என இரண்டு வேளைகளும் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார். உண்மையில் அவர் எனக்கு நல்ல நண்பர் என்பதை தாண்டி, எனக்கு கிடைத்த சிறந்த சகோதரர்.

எனது சிறந்த நண்பராக இருந்த அவர் இன்று என் குடும்பத்தில் ஒருவர் அதுமட்டுமல்லாமல் என்னுடைய ரத்தம்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சமந்தா போட்ட ஒரு லைக்..! நாக சைதன்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்..!