தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சங்கீதா, தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வமாகக் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் "சங்கீதா மற்றும் கிரிஷ் ஜோடி பிரிய உள்ளதாக பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது சங்கீதா இதற்கு உறுதியான விளக்கம் அளித்துள்ளார். நடிகை சங்கீதா, புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கிரிஷ்ஷை கடந்த 2009-ம் ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பல ஆண்டுகளாக திரைத்துறையின் பிரபல ஜோடியாகவும், சமூக வலைதளங்களில் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுவரும் நல்ல நட்புக்கூட்டணி என்றும் அனைவராலும் அறியப்பட்டவர்கள். இவ்விருவருக்கும் பிறந்த ஒரு மகள், இவர்களின் குடும்ப பிணைப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றது. தொடர்ந்து, தன் குடும்பத்தோடு இணைந்திருக்கும் புகைப்படங்களையும், வாழ்வியல் அனுபவங்களையும் பகிர்ந்து வந்த சங்கீதா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை “Sangeetha Krish” என்பதிலிருந்து “Sangeetha Chandram” என மாற்றியுள்ளார். இப்பெயர் மாற்றம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து பலரும், நடிகை சங்கீதா தனது கணவரான கிரிஷ்ஷை பிரியத் திட்டமிட்டு இருக்கிறாரோ? என்ற சந்தேகத்தில் ஒரு வதந்தி ரீதியாக விவாகரத்து குறித்து பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகள் பற்றி நடிகை சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து, இத்தகைய தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று துல்லியமாக கூறியுள்ளார். அதன்படி அவர் "சமூக ஊடகங்களில் எங்களது பிரிவை பற்றி பரவும் செய்திகளில் ஒரு சதவீதமும் உண்மை இல்லை. எங்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது" என தெரிவித்திருக்கிறார். மேலும், தனது பெயரில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பேசும் போது, "நான் பெயரை மாற்றியிருக்கிறேன் என்பது உண்மை தான். ஆனால் அதற்கான காரணம் நியூமராலஜி. அதற்காகவே பெயர் மாற்றம் செய்தேன். அதை மற்றவொரு வகையில் புகுத்துவது தேவையற்றது" என விளக்கம் அளித்திருக்கிறார் சங்கீதா. நியூமராலஜி என்பது, எண்ணங்களின் அதீத சக்தியை நம்பும் ஒரு பிரத்தியேக மரபு. இதில், ஒருவரின் பெயர், பிறந்த தேதி, எண்ணங்கள் ஆகியவையின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கையின் பல அம்சங்களை மாற்ற முடியும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு 'அங்காடி தெரு'..! 'சென்ட்ரல்' திரைப்படத்தின் விமர்சனம் இதோ..!
திரைத்துறையிலும், பத்திரிகை துறையிலும் பலரும் இந்த எண்ணவியல் நம்பிக்கையின் பேரில் பெயரை மாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. எனவே சமூக வலைதளங்களில் ஒரு சிறிய மாற்றம் கூட பெரும் வதந்தியாக மாறும் சூழ்நிலையில், நடிகை சங்கீதா நேரில் வந்து, விளக்கம் அளித்ததோடு, தன்னுடைய திருமண வாழ்கை பற்றி மிரளவைக்கும் வதந்திகளை நிராகரித்திருக்கிறார். இது, இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் நடிகை சங்கீதா மற்றும் கிரிஷ் ஜோடி, திரைத்துறையில் மிகவும் ரசிக்கப்படும் ஜோடிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இணையத்தில் பரவும் தகவல்களை சரிபாரிக்காமல் பகிரும் பழக்கத்தால், பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், நடிகை சங்கீதா தனது குடும்ப வாழ்க்கை குறித்து நேராக வந்து விளக்கம் அளித்திருப்பது பாராட்டத்தக்கது.

தனிப்பட்ட மாற்றங்கள், அவசியம் பொதுவான முடிவுகளுக்கு காரணமாக இருக்க முடியாது என்பதையும், பெயர் மாற்றம் என்ற மாற்றம், வாழ்கையின் உள் இயக்கங்களை மாற்றும் உரிமையில்லை என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: தன்னை ஒரு நடன இயக்குனர் அவமானபடுத்தி விட்டார்...! பாலிவுட் நடிகை இஷா கோபிகர் பரபரப்பு குற்றச்சாட்டு..!