திருச்சியில் அமமுக டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா ராமதாஸ் சந்திப்பு பலம் வாய்ந்ததாக இருக்குமா என்று ஊடகத்தை சேர்ந்த நீங்கதான் சொல்லணும். தொகுதி பங்கீடு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை நிறைவாக சமூகமாக தொகுதி பங்கீடு செல்கிறது,
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு எந்த ஒரு கூட்டணியும் பலம் பெற்றால் சிறப்பாகத்தான் இருக்கும். தற்போது திமுக ரோட்ல போறவங்க, தபால் போட வந்தவங்க, ஸ்விக்கி(Swiggy) டெலிவரி கொடுக்க வந்தவங்க எல்லாரையும் கட்சில சேர்த்து சீட் கொடுக்குறாங்க, என்டிஏ கூட்டணி பலப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.
தேர்தல் நேரத்துல கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். அது ஒண்ணுதான். மத்தபடி ஒரே கொள்கை இருக்குறவங்க எல்லாம் ஒரே கட்சியா இருந்திருக்கலாம். அது மாதிரி எதிர்க்கொள்கை இருப்பவர்களும்... இப்ப காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் சேரலயா கூட்டணில? அந்த மாதிரிதான் பல கட்சிகள்.
இதையும் படிங்க: விரைவில் தொகுதி பங்கீடு... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கணும்...! Ttv தினகரன் விருப்பம்..!!
எங்க கூட்டணி இன்னும் பலப்பட வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்கிறேன். மற்ற விஷயங்களை இபிஎஸ் (EPS) அவர்களும் டெல்லி மத்திய தலைவர்களும் பார்த்துப்பாங்க.எங்கள் விருப்பமும் அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான்.
எங்கள் சார்பில் எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது எங்களது விருப்பம்னு பலமுறை சொல்லிட்டேன். அதே நேரத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று சொல்கிறேன்.
அமித் ஷாவும் மோடியும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை சொல்கிறார்கள் எனக்கூறினார்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!