தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் தனது 40வது திரைப்படமாக "3 BHK" படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற அதிக கவனம் பெற்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த '3 BHK' திரைப்படம், ஒரு நடுத்தர குடும்பம் தங்களது கனவு இல்லத்தை வாங்குவதற்காக எதிர்கொள்ளும் நெடுந்தூரமான பயணத்தையும், அதன் பின்னணியில் உள்ள உணர்வுகளையும் மிக துள்ளியமாக சித்தரிக்கிறது. வாழ்க்கையின் உண்மையான எதிர்ப்பார்ப்புகள், நிதி பற்றாக்குறை, குடும்ப உறவுகள், சமூக அழுத்தங்கள் போன்றவைகளை உணர்ச்சி பூர்வமாக இத்-திரைக்கதையில் பார்க்க முடிகிறது.
இப்படத்தில் நடிகர் சித்தார்துக்கு ஜோடியாக நடித்து இருகிறார் நடிகை சைத்ரா. உண்மையில் தமிழ் சினிமாவில் சைத்ராவுக்கு முக்கிய மாறுபாட்டை ஏற்படுத்தும் படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள அம்ரித் ராம்நாத்தின் இசை தான் இந்த திரைப்படத்தின் உணர்வுகளை மேலும் உயிர்பெற செய்வதாக இருக்கிறது. இப்படி இருக்க, யாரும் எதிர்பாராத வகையில் இத்திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னையில் "3BHK" படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த வெற்றிவிழாவில், படக்குழுவினர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் வருகை தந்தது விழாவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், படவெற்றி விழாவில் சரத்குமார் மற்றும் சித்தார்த் இடையே நடந்த நகைச்சுவை கலந்த உரையாடல், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்து பேசிக்கொண்டது நிகழ்ச்சியையே மிக இனிமையாக மாற்றி அமைத்தது. அப்படி என்ன தான் நடந்தது என பார்த்தால், விழாவின் போது, இத்-திரைப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாதிற்கு நடிகர் சரத்குமார் தனது கையில் அணிந்திருந்த வாட்சை பரிசாக வழங்கினார். இது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்த சித்தார்த், சரத்குமாரை பார்த்து, " சார், அம்ரித் வாட்ச் கேட்டான். நீங்க அத குடுத்தீங்க. எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிக்கும் சார். சைத்ராவுக்கு உங்க கார் ரொம்ப பிடிக்கும். அடுத்த தடவை அதனை தான் எங்களுக்கு பரிசாக கொடுகனும்" என்கிறார். இதனால் அங்கு சிரிப்பலை உண்டானது.
இதையும் படிங்க: 3BHK பட வெற்றி விழாவில் சுவாரசியம்.. இசையமைப்பாளருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த சரத்குமார்..!
மேலும், நடிகர் சித்தார்த் விழாவில் தனது கூலிங் கிளாஸை சட்டையின் பின்னால் மாட்டி வைத்திருந்ததை பார்த்து, உடனே அனைவரிடம் சிரித்தவண்ணம் மன்னிப்புக் கேட்டதோடு, " சல்மான் கானை மாதிரி க்ளாஸ் பின்னாடி போட்டுட்டேன். சாரி, நாம இப்போ முன்னாடியே மாட்டிரலாம்" என சித்தார்த் கூறியதும், மீண்டும் அரங்கில் சிரிப்பு சத்தம் கேட்டது. இப்படி இருக்க, இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத், ‘3 BHK’ திரைப்படத்தின் இசை மூலம் தனக்கென ஒரு தனிச்சிறப்பை ஏற்படுத்தியுள்ளார். திரைப்படத்தில் உள்ள பின்னணி இசையும், பாடல்களும் கதையின் உணர்வுகளை தூக்கிக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. சரத்குமாரிடமிருந்து நேரில் வாட்ச் பரிசாக கிடைத்தது, அவருக்கு மேலும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியதாக இருந்தது. இந்த நிலையில் ‘3 BHK’ திரைப்படம் வெற்றிப்படமாக மாறியதோடு, அதன் வெற்றிவிழாவும் தமிழ்சினிமா ரசிகர்களுக்குள் நல்ல மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சித்தார்த் மற்றும் சரத்குமார் பேசிக்கொண்ட நகைச்சுவை தருணங்கள், தமிழ் சினிமாவின் விழாக்களில் கூடுதல் ஆர்வத்தை மக்கள் மத்தியில் சேர்த்துள்ளது.

சமூகத்தில் நடக்கும் பொருளாதார பின்னணிகளும், குடும்ப ஆசைகளும், உணர்வுகளும் கலந்த இப்படமானது, தமிழ் திரைப்படங்களில் சமூக உணர்வுகளைக் கொண்ட கலாச்சாரத்தை முன்னிறுத்தும் மேலும் ஒரு சிறந்த முயற்சி எனலாம்.
இதையும் படிங்க: சூதாட்ட விளம்பர விவகாரம்.. அமலாக்கத்துறை பிடியில் பிரபலங்கள்..! பீதியில் திரைத்துறையினர்..!