இன்று பெங்களூரு மல்லேஸ்வரம் இடத்தில் உலகச் திரையுலகிற்கு பொற்காலத்தை நன்கு காட்டிய, முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் கன்னடத்தின் ‘அபிநய சரஸ்வதி’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் நடிகை பி. சரோஜா தேவி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல தேசிய மற்றும் மாநில விருதுகளைபெற்றவர், இப்படிப்பட்ட ஒருவரது மறைவால் இன்று திரையுலகம் துக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறது. இப்படி இருக்க, நடிகை பி. சரோஜா தேவியின் மறைவுக்கு பல பிரபலங்கள் முதல் தலைவர்கள் வரை தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
சூப்பர் ஸ்டார் 'ரஜினி காந்த்' பதிவில், "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என பதிவிட்டு இருக்கிறார் ரஜினிகாந்த்
நடிகை குஷ்பு:
"ஒரு தங்க சினிமா சகாப்தம் முடிவுக்கு வருகிறது. #சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் அவரைப் போல பெயரையும் புகழையும் அனுபவித்ததில்லை. அவர் மிகவும் அன்பானவர். அவருடன் ஒரு சிறந்த உறவு இருந்தது. அவரைச் சந்திக்காமல் பெங்களூருக்கான எனது பயணம் முழுமையடையாது. சென்னையில் இருக்கும் போதெல்லாம் அவர் அழைப்பார். அவரை மிகவும் மிஸ் செய்வேன். சாந்தியடைய அம்மா" என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!

இவர்களை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, “நல்ல தோழியை இழந்துவிட்டேன்.” என பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், அரசியல் தலைவர்கள், இயக்குநர்கள், பிற பிரபலங்கள் வரிசையில்
மு.க. ஸ்டாலின் (தமிழ்நாடு முதல்வர்) அவர்: “...அபிநய சரஸ்வதி எனப் புகழ்பெற்றவர்… அவரது மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது...” என பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயளாலர்) அவர்: “தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி… ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
மேலும், அரசியல் மற்றும் திரையுலக தலைவர்கள் முதல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பலரும் “அபிநய சரஸ்வதி” என குறிப்பிட்டு, அவரது துயரமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர் .

இப்படி உலகச் சினிமாவில் காலம் கடந்த முகமாய், மனமயமான கலைஞரும், பொது மக்களுக்கும் ஒரு எல்லையற்ற நாயகியாகவும் இருந்த பி. சரோஜா தேவியின் மறைவு, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிக் கலை உலகங்களில் உள்ள அனைவரையும் வேதனை படவைத்துள்ளது. அவரது வசனம், புன்னகை, காட்சி, நடிப்பு முதலானவை எப்போதும் மக்கள் நினைவில் நீங்காமல் நிற்கும். திரையுலகம் அவரை எளிதில் மறக்காது. மக்களும் மறக்கமாட்டார்கள்.
இதையும் படிங்க: தனது பாசத்தால் பூனையை மயக்கிய நடிகர் அஜித்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!