உலகளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகைகளில் மிகவும் முக்கியமான இடத்திலும் அதிக ரசிகர்களையும் கொண்டவர் தான் ஸ்கார்லெட் ஜோஹன்சன். 'மார்வெல் ஸ்டுடியோஸ்' தயாரித்த 'அவெஞ்சர்ஸ்' திரைப்பட வலம் வருகிறார் தொடர் மற்றும் Lucy, Marriage Story, Black Widow போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்ததன் மூலம், இன்று உலக புகழின் உச்சபச்ச நட்சத்திரமாக ஜோஹன்சன். இப்படி இருக்க, ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "Jurassic World: Rebirth". இந்த படத்தில், பிரபல நடிகர் ஜோனாதன் பைலி உடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியானதில் இருந்து, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், விமர்சன ரீதியில் கலவையான வரவேற்பையும் பெற்று வருகிறது.
இப்படத்தின் ரெட் கார்பெட் பிரிமியர் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது கணவர் கொலின் ஜோஸ்ட் உடன் வந்திருந்தார். ஆனால் அதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்னவெனில், ஜோனாதன் பைலியை, ஸ்கார்லெட் நெருங்கி, அனைத்தபடி மனதார முத்தமிட்ட காட்சி தான். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி இருக்கின்றன. அதன்படி, இந்த காட்சியை பார்த்த சிலர், “கணவரின் முன்னிலையில் இந்த செயல் தேவையா?” என கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர், “ஹாலிவுட் நட்சத்திரங்களின் நடத்தை பொதுவெளியில் இப்படி இருப்பது ஏற்க முடியாதது” எனவும் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்க, இந்த விவகாரம் பூதாகரமாக மாறி வெடித்து வரும் நிலையில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமூக வலைதளங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, அவர் “அன்பை அனைத்து வகைகளிலும் வெளிப்படுத்தலாம் என்பதை நான் அதிகம் நம்புகிறேன். உங்கள் நண்பர்களை முத்தமிட முடியாவிட்டால், என்ன பயன்? வாழ்க்கை மிகவும் குறுகியது. உணர்வுகளை அடக்கி வைத்து கொள்வதால் என்ன பயன்?” என தனது பதில்களால் ரசிகர்களிடையே மாற்று கருத்துகளை உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில், ஸ்கார்லெட்டினை மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டவர் தான் கொலின் ஜோஸ்ட், இவர் சாடரடே நைட் லைவ் (SNL) நிகழ்ச்சியின் பிரபல காமெடி நடிகர் மற்றும் எழுத்தாளர். இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும்போது, கொலின் மிகத் தெளிவாகவும், துணிச்சலாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல முடியும். அந்த வகையில் அவர் பேசுகையில், “மக்கள் உண்மையிலேயே இந்த முத்த சம்பவத்தை மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். யாராவது ஒருவர் தங்கள் நண்பரை முத்தமிடும்போது... அதை சர்ச்சையாக மாற்றுவது மிகவும் முட்டாள்தனமாகவே நான் பார்க்கிறேன்..
இதையும் படிங்க: இளையராஜா வீட்டு மருமகளாக வேண்டியவள் நான் - சர்ச்சை...! நடிகை வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்..!
மேலும் நண்பர்களுக்கிடையேயான உறவு, நம்பிக்கையும் மனம்திறந்த அணுகுமுறையும், சமூகத்தின் மாறுபட்ட பார்வை என்பன பற்றியது" என தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதேபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் மார்க் ரஃபலோ, Lady Gaga, Zendaya உள்ளிட்ட பிரபலங்களுடனும் நடந்திருக்கின்றன. அந்த நேரங்களிலும் இதுபோன்ற விவாதங்கள் எழுந்தன. இது ஹாலிவுட் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டுமா? அல்லது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நிலை தேவைப்படுகிறதா? என்ற முக்கிய கேள்வியை இந்த சம்பவம் கேட்க வைக்கிறது. இருப்பினும், ஸ்கார்லெட் ஜோஹன்சன், தனது திறந்தவெளி அணுகுமுறையாலும், உணர்வுகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் பாணியாலும், ஒரு நேர்மையான மனிதராகவும், பிரபலமாகவும் திகழ்கிறார். அவரது கணவர் கொலின் ஜோஸ்ட் இதனை மகிழ்ச்சியுடன் புரிந்து கொள்வதும், அவரது உறவின் வலிமையை காட்டுகிறது. வாழ்க்கை குறுகியது, என ஸ்கார்லெட் கூறியது போல, உணர்வுகளை அடக்காமல் வாழ்வது தான் அவரின் வாழ்க்கைத் தத்துவமாக இருக்கிறது

. இதை விமர்சிப்பவர்களும், ஆதரிப்பவர்களும் தங்களது பார்வையின் பிரதிபலிப்பை சமூக வலைதளங்களில் வலியுறுத்திக்கொண்டே வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகா மந்தனா 'அனிமல்' ஹீரோவை காதலிக்க தயாராம்..! நேஷனல் கிரஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!