தமிழ் சின்னத்திரை உலகம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.
\\
ஒருகாலத்தில் கதாநாயகர்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்போது அந்த நிலை முற்றிலும் மாறி, சின்னத்திரை நாயகிகளே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்த வாரம்.. ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்..! எதை, எதில் பார்க்கலாம்..? லிஸ்ட் இதோ..!

குறிப்பாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி, சீரியல் நடிகைகளின் புகழை வீட்டுக்குள் மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினரிடையிலும் கொண்டு சேர்த்துள்ளது.

இன்று இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் நுழைந்தாலே, சீரியல் நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் ஆகியவை நிரம்பி வழிகின்றன.

அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பக்கங்கள் உருவாகி, தினமும் அப்டேட்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த பட்டியலில் தற்போது அதிகம் பேசப்படுபவர்களில் ஒருவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்வாதி ஷர்மா.

இயல்பான நடிப்பு, அழகிய முகபாவனை, எளிமையான தோற்றம் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வாதி ஷர்மா.

சீரியலில் பாரம்பரிய உடைகளில் குடும்பப் பெண்ணாக தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் அவர் காட்டும் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல், குடும்ப உறவுகள், உணர்வுகள், காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தொடர்.

இதில் ஸ்வாதி ஷர்மா நடித்த கதாபாத்திரம், அமைதியும் உறுதியும் கொண்ட பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியதால், சீரியல் ரசிகர்களிடம் அவர் விரைவாக பிரபலமானார். குறிப்பாக பெண்கள் பார்வையாளர்கள், அவரது கதாபாத்திரத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டு பார்க்கத் தொடங்கினர்.
இதையும் படிங்க: பிரபல பாடகி ஜானகி வீட்டில் சோகம்..!! இறைவனடி சேர்ந்தார் மகன் முரளி கிருஷ்ணா..!!