பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்தவர் தான் ரோகிணி, அவருக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார்.

இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்த்த ஸ்ருதி, மனவேதனையின் உச்சத்துக்கே சென்று பதிவொன்றை போட்டார், வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள்.
ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டை கீழே படித்து பார்த்தால் அனைவரும் என்னை தான் குறை சொல்கிறீர்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே" என காட்டமாக பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: "இந்த அசிங்கம் உனக்கு தேவையா கோபி"..! மாளவிக மோகனனிடம் வாங்கிக்கட்டி கொண்ட ரசிகர்..!

அவருக்கு ஆதரவாக, பாடகி சின்மயி, ஒரு இழிமகன் எடுத்த விடியோவையும் அதற்கான லிங்க்கையும் பல இழிமகன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா? சரி. பெண்ணியம் பேசும் முற்போக்கு நாட்டில் ஆச்சரியப்படுவதற்கில்லை, அத்தனை பேரும் நாசமா போங்க, அழிஞ்சு போங்க, உங்களை இப்படி வளர்த்தவங்களோட கூட கட்டைல போங்க." என மிகக் கடுமையாகத் தன் கருத்துகளைத் முன்வைத்து இருந்தார்.

அவரை தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி, ‛‛ஸ்ருதி நாராயணின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களிடம் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனை கிடையாது. இது முற்றிலும் ஒரு வியாபாரம். 'காஸ்டிங் கவுச்' என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட சதிச்செயல்.
சினிமாவில் ஆடிஷன் என்ற பெயரில் பெண்களிடம் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா? பல பெண்களின் சாபத்தை வாரி குவித்து ஒரு படத்தை எடுக்கிறீர்களே நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா? வெளியான வீடியோ போலியான வீடியோ என ஸ்ருதி நாராயணன் தொடர்ந்து வலியுறித்தி வருகிறார். அவர் கூறுவது உண்மை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளாலும், இதுபோன்ற காஸ்டிங் கவுச்சாலும், இன்று என்னைப் போன்ற பல பெண் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்களே... கொஞ்சம் கேளுங்க... உங்கள் சினிமா துறை நாறிப் போய் உள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, நியாயமான பட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்' என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

தற்பொழுது ஸ்ருதி நாராயணனை தொடர்ந்து பல ஹீரோயின்கள் தங்கள் வேதனைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்கள் வரிசையில், தற்பொழுது சினிமாவில் தனக்கு நடந்து அனுபவத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரேயா குப்தோ. தற்பொழுது வெளியான சிக்கந்தர் முதல் வாரணம் ஆயிரம், ரோமியோ ஜூலியட், ரஜினிகாந்தின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா குப்தோ.

இவர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், கடந்த 2014ம் ஆண்டு பட ஆடிஷனுக்காக சென்னையில் உள்ள இயக்குநர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அப்பொழுது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தான் நேரடியாக ஆடிஷன் நடத்துவார்கள். நான் என் அம்மாவுடன் ஆடிஷனுக்கு சென்றேன். என்னை பார்த்த இயக்குநரோ வந்து என் மடியில் அமர்ந்து நடித்துக் காட்டுங்கள் என்றார். எனக்கு அது அசவுகரியமாக இருந்தது. அதனால் அந்த காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துவிட்டு மறுநாள் வருகிறேன் என பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

அதன் பிறகு சென்னையே வேண்டாம் மும்பையில் நடிக்க முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். மும்பையில் வாய்ப்பு தேடியபோது யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. தவறான வழியில் வாய்ப்பு பெற விரும்பவில்லை என்றார். இதனை கேட்ட நெட்டிசன்கள் சென்னையில் உள்ள இயக்குனர் என்றால் யாரை சொல்லுகிறீர்கள் என கமெண்டில் பெயரை கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல தொலைக்காட்சியின் வசமானது அஜித்தின் "குட் பேட் அக்லி"...! முன்பதிவில் ஹவுஸ் புல் லிஸ்டில் நம்பர் ஒன்..!