உலகநாயகன் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும், தனது தனித்துவமான அடையாளத்தை தானே உருவாக்கிக் கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் அவர். நடிகை, பாடகி, இசைக்கலைஞர் என பன்முக திறமைகளை கொண்ட ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் திருமணம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இப்படி இருக்க தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து பல்வேறு நேரங்களில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் திருமணம் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். “மக்கள் திருமணத்தை ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக மாற்றி, தேவையற்ற செலவுகளை செய்கிறார்கள். அது எனக்கு தேவையில்லை” என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், “நான் ஒருநாள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென நினைத்தால், அது மிக எளிமையாக இருக்க வேண்டும். கோயிலோ, பிரம்மாண்ட மண்டபமோ அல்ல. நேராக ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று பதிவு திருமணமாக செய்து கொள்வேன்” என தெரிவித்தார். இந்த கருத்து, இன்றைய இளம் தலைமுறையிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஸ்ருதி ஹாசன் இரண்டு முறை காதலித்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்ததாகவும் வந்த தகவல்கள் அனைவரும் அறிந்ததே. தனது காதல் வாழ்க்கையை மறைக்காமல், சமூக வலைதளங்களில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கெஞ்சிய நடிகை மீரா மிதுன்.. கண்டுக்காத சென்னை ஐகோர்ட்..!! SC/ST வழக்கு ரத்து மனு தள்ளுபடி..!!
ஆனால் பிரிவுக்குப் பிறகும், அவர் அதைப் பற்றிய விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். இப்படியாக ஸ்ருதி ஹாசனின் இந்த திருமணம் குறித்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் அவரது நேர்மையும், எளிமையான சிந்தனையும் பாராட்டி வருகின்றனர். சிலர், பாரம்பரிய கருத்துக்களிலிருந்து விலகி பேசுகிறார் என விமர்சித்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் அவரது கருத்துகளை ஆதரிக்கின்றனர்.

ஆகவே ஸ்ருதி ஹாசன் கூறிய இந்த மனிதநேய கருத்துகள், திருமணம் என்பது சமூக அழுத்தத்திற்காக அல்ல, தனிப்பட்ட விருப்பத்திற்கான ஒன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை மீண்டும் நினைவூட்டுகிறது. அவரது இந்த வெளிப்படையான பேச்சு, சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளதாக கூறலாம்.
இதையும் படிங்க: அடுக்கி வைத்த டயர்களுக்கு மத்தியில் ஒரு மாடர்ன் நடிகை..! ரவீனா தாஹா-வின் கலக்கல் போட்டோஸ் இதோ..!