செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலைக் கேட்டால் எப்படி ஏ.ஆர்.ரகுமான் நினைவுக்கு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை சுருதிஹாசனும் நம் நினைவுக்கு வருவார் அந்த அளவிற்கு குரலில் அநேகரை வசியம் செய்த ஸ்ருதிஹாசன் நடிப்பில் பலரை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

இப்படி உலக நாயகன் கமலஹாசனுக்கும் நடிகை சரிகாவுக்கும் பிறந்தவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இயற்கையாகவே ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர், திரைப்பட நடிகை என பல்வேறு கோணங்களில் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட இவர் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கமல் சரிகா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தார். உண்மையிலேயே இவரது இயற்பெயர் சுருதி ராஜலட்சுமி என்பதாகும். தனது பள்ளி படிப்பினை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பயின்ற ஸ்ருதிஹாசன், தனது கல்லூரி படிப்பை மும்பையில் படித்து முடித்தார். இதனை அடுத்து, கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் முறைப்படி இசையை கற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு சர்ப்ரைஸ எதிர்பார்க்கலைல.. நயன் - விக்கி தம்பதி யாருடன் திருமண நாளை கொண்டாடி இருக்காங்க பாருங்க..!

உண்மையிலேயே ஸ்ருதிஹாசன் தனது ஆறாவது வயதிலேயே கமலஹாசனின் தேவர்மகன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். அதன் பிறகு ஹிந்திலும் தனது பாடல்களை பாடி பலரது மனதையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து, தனது தகப்பனின் எந்த சாயலிலும் சினிமாவில் நுழையக்கூடாது தனது முயற்சியிலே நுழைய வேண்டும் என்று நினைத்த ஸ்ருதிஹாசன், 2000 ஆவது ஆண்டில் வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார், இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகள் இடையே வெளியான 'லக்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்தப் படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததை அடுத்து, நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு வெளியான 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

2009 ஆம் ஆண்டில் கமலஹாசனின் நடிப்பில் வெளியான 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்தில் இசை அமைத்து இசையமைப்பாளராக உருவெடுத்த ஸ்ருதிஹாசன் அதற்கு பின்பு, ஏழாம் அறிவு, த்ரி, பூஜை, வேதாளம், செல்வந்தன், இஞ்சி இடுப்பழகி, புலி, s3, புத்தம் புது காலை, ஹாய் நான்னா, சலார் உள்ளிட்ட திரைப்படங்களில் இதுவரை நடித்தும் இருக்கிறார். மேலும் இதுவரை தேவர் மகன், ஹேராம், வாரணம் ஆயிரம், உன்னைப்போல் ஒருவன், மான் கராத்தே, என்னமோ ஏதோ, லாபம், தமிழ் மொழி உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர்களின் விவாகரத்தை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதன்படி, "தனது தாய் தந்தையான கமலஹாசன் மற்றும் சரிகா ஆகிய இருவரின் பிரிவும் எனக்கு மிகவும் வருத்தத்தையே அளித்தது. ஆனாலும் இவர்கள் பிரிவால் வாழ்க்கையின் ஒரு முக்கியமான மதிப்புமிக்க பாடத்தை இன்று நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

என்னவெனில் ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எப்படி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் எனது அம்மா சரிகா விவாகரத்து பெற்ற பின் தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் இந்த சமுதாயத்தில் நின்று தனது வாழ்க்கையை தனக்கேற்றபடி மாற்றி வடிவமைத்து வாழ்ந்து காட்டிய விதம் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது.

உண்மையிலேயே ஒரு பெண்ணின் பிரிவுக்குப் பின்பாக அவர் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் இந்த சமுதாயத்தில் வாழ்வது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆதலால் என்றும் தன்னிடம் உணர்ச்சிகள் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு பொருளாதாரத்தையும் நம் கையில் வைக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது... அதனையே என் வாழ்க்கையின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகவும் மாற்றி வைத்திருக்கிறேன் " என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே கியூஆர் கோட் தான்.. ரூ.69 லட்சம் அபேஸ்..! நடிகை மீது பிளேட்டை திருப்பிய கில்லாடி பெண்கள்..!