தமிழ் திரையுலகில் பல போராட்டங்களுக்கு பின்பாக இன்றும் தனது காலடித்தடத்தை சினிமாவில் பதித்து வருகிறார் என்றால் அவர்தான் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என தற்பொழுது பேன் இந்தியா நாயகியாக வலம் வரும் நயன்தாராவிற்கு ரசிகர் பட்டாளம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதே சமயம் அவர் மீதான விமர்சனங்களும் குறையாத வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

இன்று பல படங்களை தன் கையில் வைத்துக்கொண்டு வெளியே செல்ல கூட நேரமில்லாமல் பிசியாக இருக்கும் நயன்தாரா.. இந்த சினிமா உலகில் ஈசியாக மேலே வரவில்லை... தன் சினிமா வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தவர்.
இதையும் படிங்க: ஷூட்டிங் பிஸிக்கு நடுவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் செய்த வேலையை பாருங்க..!

இவரை ஏளனமாக பேசியவர்கள் மத்தியில் இன்று சாதித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடனும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானுடனும் நடித்து தனக்கென ஒரு இடத்தை வகுத்தவர். இதனை அடுத்து, கோலமாவு கோகிலா, அறம் என இவர் கதாநாயகன் இல்லாமல் நடித்த படங்களும் ஹிட் கொடுத்துள்ளது.

இந்த சூழலில், நயன்தாரா தனது திருமணத்திற்கு பின் பலரது விமர்சனங்களில் சரிசமமாக சிக்கி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின் முதலில் திருமண ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் வந்தது, அதன் பின் ஒருவழியாக ஆவணப்படத்தை வெளியிடலாம் என ட்ரெய்லரை ரிலீஸ் செய்தபோது தனுஷிடம் இருந்து 'காபி ரைட்ஸ்' சிக்கல் வந்தது. பின் நான் "லேடி சூப்பர் ஸ்டார்" இல்லை என்றார் உடனே ரசிகர்கள், நடிகர்கள் , நடிகைகள் என பலரிடமிருந்து பலரூபத்தில் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது.

பார்க்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைப்பது போல், நயன்தாரா திருப்பும் இடம் எல்லாம் தற்பொழுது கன்னி வெடியை அவரே வைத்து தடுமாறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் ராக்காயி, HI, மண்ணாங்கட்டி, dear students என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ள நயன்தாரா தனது பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட "முக்குத்தி அம்மன் 2"வில் தற்பொழுது நடித்து வருகிறார்.

இப்படி இருக்க, தனது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தங்களது மூன்றாவது திருமண நாளான இன்று நெதர்லாந்தில் தனது காதல் மனைவியான நயன்தாராவுடனும் இரண்டு குழந்தைகளுடனும் இருசக்கர சைக்கிளில் சவாரி செய்தபடி கொண்டாடி மகிழ்விக்கும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதன் கீழ் "கடவுள் மற்றும் இந்த அழகான பிரபஞ்சத்தின் அன்பினால் மட்டுமே நிறைந்த வாழ்க்கை கிடைக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது, திருமண ஆண்டுவிழா வாழ்த்துக்கள் என் தங்கமே நயன்தாரா 11 வருட ஒற்றுமைக்கு கிடைத்த பலன் இந்த அழகான குடும்ப வாழ்க்கை" என பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், " இது ஒரு இனிய திருமண நாள். என் உயிர் நயன்தாரா இந்த ஒளிக்கும், புன்னகைக்கும், நன்மைக்கும், ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும், மிக முக்கியமான மகிழ்ச்சிக்கும் காரணம் நீங்கள்தான்! கடவுளின் அக்கறை, பிரபஞ்சத்தின் ஆதரவு மற்றும் பல ஆண்டுகளாக நாம் சம்பாதித்த அனைத்து அன்புக்குரியவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் நல்லெண்ணம் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும்!

மேலும் வலிமை மற்றும் அமைதிக்கு வாழ்த்துக்கள்! நித்திய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களை உண்மையாக, வெறித்தனமாக, ஆழமாக என் முழு மனதுடனும் ஆன்மாவுடனும் நேசிக்கிறேன்" என புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதிக சம்பளம் கேட்ட நயன்தாரா..! ஆடவிட்டு அடித்த இயக்குநர்.. சரண்டராகி நிற்கும் EX லேடி சூப்பர் ஸ்டார்..!