விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது “சிறகடிக்க ஆசை” என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரம்பத்தில் குடும்ப உணர்வுகள், உறவுகளின் பாசம், கனவுகள் ஆகியவற்றை மையமாக கொண்டு நகர்ந்த இந்த சீரியல், தற்போது முழுக்க முழுக்க திருப்பங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்த ஒரு கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ரோஹினி மறைத்து வைத்திருந்த உண்மைகள் ஒன்று ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பது, ரசிகர்களை திரைக்கு கட்டிப்போட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக ரோஹினி மறைத்து வைத்திருந்த மிகப்பெரிய உண்மை, இறுதியாக முத்து மூலமாக அண்ணாமலை குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. ரோஹினியின் இரட்டை வேடம், அவள் செய்த சதிகள், குடும்பத்துக்குள் விதைத்த விஷ விதைகள் அனைத்தும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. இதன் உச்சகட்டமாக, விஜயா ரோஹினியை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் முடிவை எடுத்தார். அதோடு நிற்காமல், தனது மகனுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்திலும் விஜயா இருப்பது, சீரியலின் கதையை இன்னொரு திசையில் கொண்டு சென்றுள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம், சிந்தாமணி தனது வழக்கமான சூழ்ச்சிகளுடன் களமிறங்கியுள்ளார். ரோஹினியை முழுமையாக தன் கைக்குள் போட்டுக் கொண்டு, விஜயா வீட்டையே கைப்பற்ற வேண்டும் என்பதே சிந்தாமணியின் அடுத்த கட்ட திட்டமாக இருக்கிறது. வெளியில் பார்த்தால் ரோஹினியை ஆதரிப்பது போல நடித்து, உள்ளுக்குள் பெரிய கேம் ஒன்றை அவர் ஆடி வருகிறார் என்பதும், சீரியல் ரசிகர்களுக்கு நன்றாக புரிந்து வருகிறது.
இதையும் படிங்க: மனோஜின் முட்டாள் தனத்தினால் கையைவிட்டு செல்லும் விஜயா வீடு..! கண்ணீருடன் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

இந்த நிலையில், இன்றைய எபிசோடு முழுக்க முழுக்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மனோஜிற்கு பணம் கொடுத்த பைனான்சியர், எப்படியோ விஜயாவின் கோபத்தை தூண்டி, அவரிடமிருந்து முக்கியமான கையெழுத்தை வாங்கிக் கொள்கிறார். அந்த காட்சியில் விஜயா, கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதற்காக கையெழுத்து போடுகிறோம் என்றே யோசிக்காமல் செய்கிறார். ஆனால் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும், “இது தவறு, இப்படிச் செய்யக்கூடாது” என எச்சரிக்கிறார்கள். அதற்கு விஜயா, “ஒன்றும் ஆகாது, எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என அலட்சியமாக பதில் கூறுவது, எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை வெடிக்கப் போகிறது என்பதை முன்னமே உணர்த்துகிறது.
இதற்கிடையில், முத்து ஆரம்பத்திலிருந்தே அந்த பைனான்சியரை சந்தேகப்பட்டு வந்தது இன்றைய எபிசோடில் உண்மையாய் மாறுகிறது. அந்த பைனான்சியர், சிந்தாமணி சொல்லித்தான் விஜயாவை இப்படியெல்லாம் தூண்டி கையெழுத்து வாங்கியுள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது. இதன் மூலம், சிந்தாமணி எவ்வளவு ஆழமாக இந்த குடும்பத்தை சிக்கலில் மாட்ட வைக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.
இதைத் தொடர்ந்து, இன்னொரு முக்கியமான திருப்பமாக, சத்யா பைனான்ஸ் கம்பெனிக்கு ஒருவர் பண விஷயமாக வருகிறார். அவர் சத்யாவுக்கு பழக்கமானவர் என்றும், முன்பு சிட்டியுடன் சேர்ந்து வேலை பார்த்தவர் என்றும் தெரிய வருகிறது. தற்போது சிட்டியுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும், புதிய தொழில் தொடங்க பண உதவி கேட்டு வந்த அந்த நபர், மிகப்பெரிய உண்மையை சத்யாவிடம் உடைக்கிறார். அதாவது, முத்து காரின் பிரேக்கை கட் செய்யும் பிளான், சிட்டி மற்றும் ரோஹினி இணைந்து போட்டதுதான் என்ற அதிர்ச்சிகரமான தகவலை அவர் கூறுகிறார்.

இந்த உண்மையை கேட்ட சத்யாவுக்கும் முத்துவுக்கும் நிலைமை புரண்டு போகிறது. உயிருக்கு ஆபத்தான அளவுக்கு ரோஹினி சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதை உணர்ந்த முத்து, ஒரு நிமிடமும் தாமதிக்காமல் நேராக அண்ணாமலை வீட்டிற்கு வந்து, இந்த முழு உண்மையையும் குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதைக் கேட்ட அண்ணாமலை குடும்பம் மொத்தமும் ஷாக் ஆகிறது. “ஒரு பெண் இவ்வளவு தூரம் போவாளா?” என்ற கேள்வி எல்லோரின் முகத்திலும் தெரிகிறது.
அந்த ஷாக் குறைவதற்குள், இன்னொரு அதிர்ச்சி சம்பவமாக, வித்யா தனது கணவருடன் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். வந்தவுடன், ரோஹினி இதுவரை செய்த அனைத்து மோசடி வேலைகளையும் ஒன்றொன்றாக பட்டியலிட்டு சொல்லத் தொடங்குகிறார். சத்யா திருடிய வீடியோவிற்காக முத்துவின் போனை எடுத்தது, பார்வதி வீட்டில் பணம் திருடியது, மனோஜ் கடையிலேயே பணத்தை எடுத்தது, வீட்டின் முன்பு இருந்த மீனா கடையை தூக்கியது, அதோடு மீனா அம்மாவின் கடையை தூக்கியது என ரோஹினி செய்த ஒவ்வொரு fraud விஷயத்தையும் வித்யா வெளிப்படையாக கூறுகிறார்.
இந்த தகவல்களை கேட்டதும், அண்ணாமலை குடும்பத்தினர் அனைவரும் செம்ம ஷாக் ஆகிறார்கள். “இப்படியும் ஒரு பெண் இருப்பாரா?” என சிலர் புலம்ப, சிலர் கோபத்தில் கத்துகிறார்கள். குறிப்பாக முத்து, விஜயா, மனோஜ் ஆகியோர், இனி ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ரோஹினி மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் இந்த தருணத்தில், குடும்பத்தின் பெரியவர் அண்ணாமலை தலையிடுகிறார். “போலீஸ், கேஸ் எல்லாம் வேண்டாம்” என அவர் கூறுவது, அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியாக்குகிறது. ஆனால் அதே நேரத்தில், அவர் ஒரு கடுமையான முடிவை அறிவிக்கிறார். “இனி ரோஹினி இந்த வீட்டின் மருமகள் கிடையாது. விவாகரத்து வாங்கும் வேலையை உடனடியாக, வேகமாக செய்ய வேண்டும்” என உறுதியாக கூறுகிறார். அண்ணாமலையின் இந்த முடிவு, சீரியலின் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.

மொத்தத்தில், இன்றைய “சிறகடிக்க ஆசை” எபிசோடு, உண்மைகள், சதிகள், அதிர்ச்சிகள் என அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. ரோஹினியின் அத்தியாயம் முடிவுக்கு வருமா? சிந்தாமணியின் சதி இத்துடன் முடிவடையுமா? விஜயா கையெழுத்து போட்டது எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? என்ற பல கேள்விகளுடன், அடுத்த எபிசோடுகளுக்கான எதிர்பார்ப்பை இந்த எபிசோடு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இதையும் படிங்க: மனோஜின் முட்டாள் தனத்தினால் கையைவிட்டு செல்லும் விஜயா வீடு..! கண்ணீருடன் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!