முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டின் மின்சார நிலை குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மின் தடையோ, மின்வெட்டோ, அதிக மின் கட்டண உயர்வோ இல்லாமல் காற்றலை மற்றும் சூரிய மின் திட்டங்கள் மூலம் சுமார் 15,000 மெகாவாட் புதிய மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியது.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெருமைக்கு உரியவர்.ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் வீட்டு மின் கட்டணம் 1 முதல் 400 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.35 என்றிருந்தது இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.4.70 ஆக மாற்றப்பட்டுள்ளது.

வாக்களித்த ஏழை எளிய மக்களிடம் திரைப்படத்திற்கு பிளாக்டிக்கெட் விற்று கொள்ளையடிப்பது போல் மின் கட்டணத்திலும் கொள்ளையடிப்பது நியாயமா என்று முதல்வரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்கள் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறைந்த விலையில் தயாராக உள்ளது. ஆனால் மின் வாரியம் பவர் பர்ச்சேஸ் அக்ரிமென்ட் மூலம் அதை வாங்குவதற்கு அரசு அனுமதி அளிக்காமல் தொடர் மின்வெட்டுக்கு மக்களை ஆளாக்கி இரவு தூங்கவிடாமல் தவிக்க விட்டுவிட்டு இன்பச் சுற்றுலா சென்று விட்டதாக அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?
தவெக ஆட்சி செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி முதல்வரின் ரெட்டி கேங் மூலம் மணல் மற்றும் கனிம வளங்களை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றது போல் மின் வாரியத்தையும் அதானியிடம் விற்க துடிப்பதுதான் தூய ஆட்சியின் லட்சணமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: "நாகரீகமில்லா கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா"..! அப்பாவு விமர்சனம்... பரபரப்பு..!!