தற்பொழுது அமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.எஸ் பிரசன்னா, முழுக்க முழுக்க நடிகர் அமீர் கானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா முன்னணி கதாபார்த்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பலரது எதிர்பார்ப்பையும் துண்டி இருந்த இப்படம் ஜூன் 20-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது.
![amir khan son]](https://www.tamilwire.in/img/no-thumbnail.png)
இன்று மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் அமீர்கான் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் அவரது திரைவாழ்க்கை என்று பார்க்கும் பொழுது, 1973ம் ஆண்டு "யாதோன் கி பாரத்" என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்கான். பின்னர் இவரது நண்பரும் இயக்குநருமான அசுதோஷ் கோவரிகருடன் இணைந்து 1984ம் ஆண்டு "ஹோலி" என்ற படத்தில்துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டில் "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் அமீர்கானுக்கு தேடி தந்தது. அடுத்ததாக "ராக்" படத்தில் சிறப்பாக நடித்து 'தேசிய திரைப்பட விருதை' பெற்றார். மிக குறுகிய கால நடிப்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிய பெருமை அமீர் கானையே சேரும்.
இதையும் படிங்க: என் உதட்டில் வலுக்கட்டாயமாக கொக்கைன் தடவினாங்க..! நடிகை ஸ்ரீரெட்டி பேச்சால் சர்ச்சை..!
![amir khan son]](https://www.tamilwire.in/img/no-thumbnail.png)
அதன் பிறகு, 1990ம் ஆண்டு "தில்", 1991ம் ஆண்டு "தில் ஹை கே மந்தா நஹின்", 1992ம் ஆண்டு "ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்", 1993ம் ஆண்டு "ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே", அதே வருடம் மீண்டும் "பரம்பரா", 1994ம் ஆண்டு "அண்டாஸ் அப்னா அப்னா", 1995ம் ஆண்டு "பாஸி", அதே வருடம் மீண்டும் "ரங்கீலா" மற்றும் "டிராஜானி",1997ம் ஆண்டு "இஷ்க்",1998ம் ஆண்டு "எர்த்"மற்றும் "குலாம்",1999ம் ஆண்டு "சர்பரோஷ்",2001ம் ஆண்டு"தில் சஹ்தா ஹை", 2001ம் ஆண்டு "லகான்", 2005ம் ஆண்டு "மங்கள் பாண்டே", 2006ம் ஆண்டு "ஃபனா" மற்றும் "ரங் தே பசந்தி" மற்றும் தங்கல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். 2007 ஆம் ஆண்டு, அமீர் கான் "தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தந்தது.
![amir khan son]](https://www.tamilwire.in/img/no-thumbnail.png)
இதனை தொடர்ந்து, லகான், தில் சாஹ்தா ஹை, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா போன்ற அவரது பல படங்கள் பாரம்பரியமிக்க படங்களாகக் கருதப்படுகின்றன. இப்படி சினிமாவில் ஒரு பகுதியில் வெற்றி கண்டாலும் வாழ்க்கை என்று வரும்பொழுது அமீர்கான், அவரது முதல் மனைவியான ரீனா தத்தை டிசம்பர் 2001ம் ஆண்டு விவாகரத்து செய்து, டிசம்பர் 2005 இல் "கிரண் ராவை" இரண்டாவதாக திருமணம் செய்தார். பின் 2021ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அமீர் கானுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில், சில நாட்களுக்கு முன் தனது புதிய காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்த அமீர்கான், 6 வயது குழந்தைக்கு தாயாக உள்ள "கௌரிஸ் ஸ்பிராட்" என்பவரை காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியிருந்தார்.
![amir khan son]](https://www.tamilwire.in/img/no-thumbnail.png)
இந்த நிலையில் அவரது மகனை குறித்ததான ஒரு ரகசியத்தை உடைத்து இருக்கிறார் நடிகர் அமீர்கான். அதன்படி, தனது மகன் சொகுசு வாழ்க்கையை விரும்பாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். அவர் பேசுகையில், "உங்களுக்கு தெரியுமா எனக்கு ரூ.2000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஆனால் என் மகன் இன்னும் ஒரு கார் கூட வாங்கவில்லை என்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். இப்பொழுது வரை அவன் பொது போக்குவரத்தை மட்டும் தான் பயன்படுத்துகிறான். நானும் பலமுறை அவனிடம் கார் ஒன்றை வாங்கிக்கொள் என சொல்லி பார்த்து விட்டேன் கெஞ்சியும் பார்த்துவிட்டேன் ஆனால் ஒரு பயனும் இல்லை. சரி வெளியூர் பயணம் என்றால் விமானத்தில் போ என சொன்னாலும் அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விட்டு ஸ்லீப்பர் பஸ் புக் பண்ணி போகிறான்" என அவர் மகிழ்ச்சி பொங்க பேசினார்.
![amir khan son]](https://www.tamilwire.in/img/no-thumbnail.png)
இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ரூ.2000 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் இவருக்கு இப்படி ஒரு எளிமையான மகனா என ஆச்சர்யத்தில் என்ன சொல்வது என தெரியாமல் வாயடைத்து போய் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பாத்து அழுதுற போறீங்க..."ஃபிரீடம்" கதையல்ல நிஜம்..வந்து பாருங்க..! நடிகர் சசிகுமார் பேச்சு..!