சமீபத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம் என்றால் அதுதான் கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு 11 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நடத்திய ரெய்டு. அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பிய போது நேரடியாக காவல் நிலையம் சென்று தான் போதை மருந்து உபயோகித்ததை ஒப்பு கொண்டார்.

இதுவே பலருக்கு பீதியை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் பெருகி இருக்கிறது. குறிப்பாக சினிமா வட்டாரங்களில் போதை சம்பந்தமான பார்ட்டிகள் அடிக்கடி நடைபெறுவதாகவும் பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்பொழுது அதற்கு முதல் பலியாடாய் சிக்கி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த், இப்படி இருக்க நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டதாகவும். இதில் அதிமுக பிரமுகரான பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும். மேலும் பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக அவர் கூறியிருப்பதால் அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாத்து அழுதுற போறீங்க..."ஃபிரீடம்" கதையல்ல நிஜம்..வந்து பாருங்க..! நடிகர் சசிகுமார் பேச்சு..!

மேலும், பிரசாந்திடம் இருந்து தான் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களின் பல பெயர்கள் தற்பொழுது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில் போலீசார் இந்த வழக்கில் அவரது பெயரையும் லிஸ்டில் சேர்த்ததோடு அவரையும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு பாலியல் தொல்லைகள் தரும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு சினிமாவையே அதிரவைத்தவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி, இவர் தற்போது போதை கலாச்சாரம் நடிகைகளிடம் தான் அதிகம் உள்ளது என வெளிப்படையாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி, " நான் அப்பவே சொன்னேன் சினிமாவில் போதை பழக்கம் அதிகமாக உள்ளது.. பாலியல் தொல்லைகள் பெருகியுள்ளது என ஆனால் யாரும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை.. என்னை தான் விமர்சனம் செய்தீர்கள். சரி அதை விடுங்க இன்றைய நிலைமைக்கு வருவோம், தற்பொழுது பார்ட்டி ஒன்றில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு நடிகர் சிக்கி இருப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதெல்லாம் இங்கு சாதாரணமாகி விட்டது. ஏன்? நான் கலந்து கொண்ட பார்ட்டியில் கூட வலுக்கட்டாயமாகா என் உதட்டில் கொகைன் தடவப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் பெரிய இடம் அவர்களை குறித்து எனக்கு தெரியாது.

என்னமோ நடிகர்கள் மட்டும் தான் போதை பொருட்களை பயன்படுத்துற மாதிரி சொல்லுறீங்க.. இங்க நடிகர்களை விட நடிகைகள் தான் அதிகம் போதை பொருட்களை உட்கொள்கின்றனர். எதற்காக தெரியுமா.. அவர்கள் சருமம் பார்க்க மிளிரவேண்டும் என்பதற்காகவும்,தொடர்ந்து சூட்டிங் செல்வதால் சோர்வு தெரியாமல் இருக்கவும், மனா அழுத்தம் குறையவும்... ஏன்? பசி இருக்க கூடாது என்பதற்காகவும் போதை பொருளை அதிகமாக உட்கொள்கின்றனர் நடிகைகள்.. இவ்வளவு பேசுற நீ போதை பொருள் பயன்படுத்தினதில்லையா என கேட்பீர்கள் என எனக்கு தெரியும்.. நான் பயன்படுத்தியது இல்லை.. ரத்த பரிசோதனைக்கு கூப்பிட்டாலும் வர நான் தயார்.

ஆனால் இவ்வளவு பெரிய விஷயத்தை சொன்னாலும் நான் தான் கடைசியில் குற்றவாளியாக நிற்கிறேன்.. சரி கர்மா கண்டிப்பாக அனைவருக்கும் தண்டனை தரும் நாள் வெகுதொலைவில் இல்லை என காட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பறந்து போ' படத்தை பார்த்து குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன்..! இயக்குநர் வெற்றி மாறன் புகழாரம்..!