தமிழ் சினிமாவில் "சம்போ சிவ சம்போ" என பாட்டு பாடி உண்மையாக காதலிக்கும் ஜோடிகளை சேர்த்து வைக்க போராடும் நல்ல நண்பர்கள் கொண்ட அதிரடி படமாக வந்து, அனைத்து இளசுகளின் ஆழ் மனதிலும் காதலர்களுக்கு கஷ்டம் என்றால் உதவி செய்ய வேண்டும் என்ற அழகான எண்ணத்தை மனதில் விதைத்த படம் தான் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான "நாடோடிகள்".

இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் இவரது வசனங்கள் எல்லாம் ஹிட் தான் குறிப்பாக "குத்துவது நண்பனாக இருந்தாலும் செத்தாலும் வெளியே சொல்ல கூடாது" என்ற வசனத்திற்கு எல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது. இவர் 2008ம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த "சுப்ரமணியபுரம்" படத்தை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தில் வரும் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" என்ற பாடலைஇன்று கேட்டாலும் அனைவரது உள்ளத்தில் இருந்து காதல் மலரும். இதனை அடுத்து " நாடோடிகள்" படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதனை அடுத்து எடுத்த நான்கு படங்களுக்கு இல்லாமல் போனது.
இதையும் படிங்க: 2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!

ஈசன், போராளி, கோ, மெரினா ஆகிய படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தாலும் அதற்கு பின்பாக வந்த சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா, கிடாரி, வெற்றிவேல், கொடிவீரன், அசுரவதம், அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா, கென்னடி கிளப், பேட்ட, நாடோடிகள் 2, உடன்பிறப்பே, முந்தானை முடிச்சு, எம் ஜி ஆர் மகன், ராஜ வம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, காரி, நான் மிருகமாய் மாற, அயோத்தி, நா நா, நந்தன், கருடன் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் படங்காளாவே அமைந்தது.

இப்படி இருக்க, நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் "டூரிஸ்ட் ஃபேமிலி", இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக இருப்பது தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்த படத்தை 24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து, மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து தமிழ் மக்களும் பார்த்து விட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் உருவானதற்கு முன்பே இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் முக்கிய கதாப்பாத்திரத்திலும், லிஜிமோல் ஜோஸ், போஸ் வெங்கட் , ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் "ஃப்ரீடம்". வருகின்ற ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படம், 1980 கால கட்டங்களில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக தப்பித்து அகதிகளாக குடியேறிய இலங்கைத் தமிழர்கள் குறித்த படமாகவும் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்தும் இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருகிறபடியால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது இப்படம்.

இந்த நிலையில், இப்படத்தை குறித்து பேசிய நடிகரும் இயக்குனருமான சசிகுமார், " இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான படங்களில் நடிக்க தற்பொழுது தயாராகி இருக்கிறேன். அப்படி முடிவெடுத்து நான் நடித்த படம் தான் நந்தன், டூரிஸ்ட் பேமிலி தற்பொழுது வெளியாக இருக்கும் ''பிரீடம்'' போன்ற படங்கள். இப்படம் நீங்கள் நினைப்பதை போல் கற்பனை கதை அல்ல.. 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று சிறையிலிருந்து தப்பியோடிய இலங்கை அகதிகள் பற்றிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். உணர்வுபூர்வமான படமாக "பிரீடம்" திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இப்படம் "டூரிஸ்ட் பேமிலி" படத்தில் நான் இணைவதற்கு முன்பே தொடங்கப்பட்ட படம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா..! ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்..!