தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் பல சிறப்பு படங்களில் பிஸியாக நடித்து வருக்கிறார். இவரது பயணம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொடங்கி, பின்னர் நகைச்சுவை மற்றும் குடும்பம் சார்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி நடைபோட்ட இவர், தற்போது பன்முக கதாப்பாத்திரங்களில் நடித்து, முன்னணி நடிகராக தனது இடத்தைப் சினிமாவில் பிடித்து உள்ளார். அதன்படி இப்போது, இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'மதராஸி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம், அவரது திரைக்கதையின் தனித்துவத்தாலும், ஹீரோவை மையமாக வைத்து சொல்லப்படும் மாஸ் கதை என்பதாலும் துவக்கத்திலேயே பலரது கவனத்தை பெற்றுவிட்டது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், "மதராஸி" படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் பிசியாக பணியாற்றி வருகிறார். பெண்களுக்கான அதிகாரமயமான கதையம்சம் கொண்ட, உணர்ச்சி வயப்பட்ட படமாக உருவாகும் 'பராசக்தி' படத்தில் ஹீரோவாக இருந்து சமூக மாற்றங்களை முன் வைக்கும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள சிவகார்த்திகேயனை இந்த படத்தில் புதிய கோணத்தில் காணும் வாய்ப்பு அதிகம் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படங்களை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனின் 26-வது படமான "SK26" குறித்த அப்டேட்களும் இணையத்தில் பரவி வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் யார் இயக்கத்தில் உருவாகும் என்பதைப் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்க, தற்போது அந்த கேள்விக்குப் பதிலாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'டான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, தற்போது SK26 திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 'டான்' திரைப்படம் மூலம், ஒரு மாணவனின் அடையாளம் மற்றும் வாழ்க்கை குறித்த தேடல், குடும்ப உறவுகள் மற்றும் கல்வி முறைமை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த உணர்வுடன் வெளிப்படுத்தி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார் சிபி.
இதையும் படிங்க: மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்..! "பராசக்தி" படப்பிடிப்பின் போது சுவாரஸ்யம்..!
இவர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனை கொண்டிருப்பது, ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இதனுடன், SK26 படத்திற்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு ஸ்டைலிஷ் டைரக்டர் மட்டுமல்லாமல், கதையில் திருப்பங்கள், இசை, நகைச்சுவை மற்றும் அனுபவம் மிக்க திரைக்கதைகளின் மூலம் ரசிகர்களை வசியம் செய்யும் இயக்குநராகப் பேரைப் பெற்றவர். அதனால், இந்தக் கூட்டணியும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணம், ஒரு சிறிய தொலைக்காட்சியில் தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் முக்கிய இடத்தை பெற்றிருப்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது. தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றி வரும் இவரது பல்வேறு படங்கள், வெறும் வணிக ரீதியில் மட்டும் அல்லாமல், கதையின் மூலம் சமூகத்தையும் பாதிக்க கூடிய அளவில் இருக்கின்றன. ஆகவே 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகள் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முக்கியமான திருப்பங்களைக் கொண்டுவரும் என நிச்சயமாகச் சொல்லலாம்.

'மதராஸி' படத்தின் பிரமாண்ட வெளியீடு, 'பராசக்தி' திரைப்படத்தின் எதிரிபார்ப்பு, SK26 என்ற புதிய முயற்சி மற்றும் வெங்கட் பிரபுவுடன் இணையும் கூட்டணி என இவை அனைத்தும் சேர்ந்து அவரை இன்னும் சினிமாவில் உயர்த்தும். எனவே, தமிழ் சினிமாவின் வளர்ச்சி பாதையில், சிவகார்த்திகேயன் தனக்கென ஓர் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, அதில் தொடர்ந்து புதிய விதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்றுவந்தார். தற்போது, அதே பாதையில் மேலும் உறுதியுடன் முன்னேறிவரும் அவரது இந்த படங்களும், எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவரும் வகையில் வெற்றி பெற உள்ளது.
இதையும் படிங்க: கிங்காங் மகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!