காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

மேலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை குறித்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கூட ஓடமுடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த இடத்தை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் மட்டுமே அதிகம் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். கார்களிலோ அல்லது கனரக வாகனங்களிலோ செல்ல முடியாது. இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இதையும் படிங்க: ரோஜாப்பூவாக மாறிய ஹன்சிகா மோத்வானி..! அழகில் ஒருதுளி கூட குறையாமல் ஹாட் கிளிக்..!

இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போருக்கு தயாராகி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருந்தது. மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல கூடிய நீர் முதல் போக்குவரத்து வரை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல் பாகிஸ்தானிலும் வான்வழி பயணங்களில் இந்தியாவிற்கு தடைவிதித்துள்ளது. இனி எந்த பேச்சுவார்த்தையும் அல்ல, இந்தியா அடித்தால் திருப்பி அடிப்போம் என பாகிஸ்தானும் எதிர்த்து நின்றது. எனவே உலகநாடுகள் அனைத்தும் இந்த பிரச்சனையை உற்றுநோக்கி கவனித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் இந்தியா தனது முதல் அடியை பாகிஸ்தானுக்கு எதிராக கொடுத்துள்ளது.

அதன்படி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை பாக்கிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மக்களே எதிர்பார்க்காத நிலையில் இந்தத் தாக்குதலை பொதுமக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது எக்ஸ் தளத்தில், "போராளியின் போர் தொடங்கியுள்ளது. இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடன் உள்ளது." என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பாலிவுட் முன்னை நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இவர்கள் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பாராட்டுகளை எக்ஸ் தள வாயிலாக பகிர்ந்துள்ளார். அதன்படி "இது தான் இந்திய ராணுவத்தின் முகம்.. ஜெய் ஹிந்த்" என பதிவிட்டு உள்ளார்.

இதனை பார்த்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வச்ச குறி தப்பல.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..! கொண்டாட்டத்தில் திரை பிரபலங்கள்..!