• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அடிப்படையே இங்க தப்பா இருக்கு..! சிவகார்த்திகேயனை குறித்து ஆதங்கமாக பேசிய நடிகர் ஆரி..!

    நடிகர் ஆரி சிவகார்த்திகேயனை குறித்து ஆதங்கமாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Mon, 02 Mar 2026 16:13:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-sivakarthikeyan-gets-it-but-we-dont-actor-aari-aadangam-tamilcinema

    தமிழ் திரையுலகில் எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறிய நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆரி அர்ஜுனன். சிறிய கதாபாத்திரங்களில் இருந்து தொடங்கி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

    சமூக அக்கறை கொண்ட கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து வரும் அவரின் குரல், திரைத்துறையிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியுள்ளார். கதையின் மையத்தில் சமூக மற்றும் உளவியல் பரிமாணங்களை பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பட்டு புடவையில் இளசுகளை கவர்ந்து இழுக்கும் சீரியல் நடிகை தர்ஷனா..! கண்கவரும் அழகிய போட்டோசூட்..!

    actor aari

    திரைப்படம் வெளியான பின்னரும், எதிர்பார்த்த அளவுக்கு திரையிடும் வசதி கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை ஆரி முன்வைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த படத்துக்கு மால்களில் உள்ள தியேட்டர்கள் வழங்க மறுக்கிறார்கள். தற்போது அதற்காக நாங்கள் போராடி வருகிறோம். காரணம் கேட்டபோது, நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை என்று தெரிவித்தார்கள்,” என்று மனவருத்தத்துடன் கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில், “தாய்கிழவி படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள்; அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள். அந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். அவரிடம் பெரிய அளவில் விளம்பரம் செய்யும் பொருளாதார வலிமையும், சந்தை அனுபவமும் உள்ளது. ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில், அவரால் இயன்றளவு செலவு செய்து படம் தயாரித்துள்ளார். பெரிய விளம்பரங்கள் செய்ய இயலாததால் திரையிடும் வாய்ப்பே மறுக்கப்படுவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

    திரையரங்கு விநியோக முறை குறித்தும் ஆரி கருத்து தெரிவித்துள்ளார். “ஒரு படம் ஓட வேண்டுமா, ஓடக்கூடாதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இப்போது தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, மால்களும் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. அதிக விளம்பரம் செய்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால், புதுமுக இயக்குநர்கள், குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எப்படி முன்னேறுவார்கள்?” என்றார்.

    actor aari

    இந்த குற்றச்சாட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், நட்சத்திர மதிப்பு கொண்ட படங்கள் மற்றும் அதிக விளம்பரச் செலவினம் செய்யும் குழுக்கள் அதிக திரையரங்குகளைப் பெறுகின்றன என்பது நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் விவகாரம். ஆனால் ஒரு நடிகர் நேரடியாக இவ்வாறு வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

    திரையரங்கு ஒதுக்கீட்டில் சமநிலை இருக்க வேண்டுமா, சிறிய படங்களுக்கு குறைந்தது ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ஆரிக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். “படத்தின் தரம் முக்கியம், விளம்பரம் அல்ல” என்ற கருத்தும் பல இடங்களில் பகிரப்படுகிறது.

    ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம் கதைக்கள ரீதியாக வித்தியாசமான முயற்சியாக பாராட்டப்பட்டாலும், திரையிடும் வாய்ப்பு குறைவாக இருப்பது அதன் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆரியின் கருத்து, சினிமா உலகில் ஒரு முக்கியமான விவாதத்தை மீண்டும் முன்வைத்துள்ளது.

    actor aari

    இது வெறும் ஒரு படத்தின் பிரச்சினையா, அல்லது முழு விநியோக அமைப்பில் மாற்றம் தேவைப்படுகிறதா என்பது குறித்து வருங்காலத்தில் மேலும் விவாதங்கள் எழும் என்பதில் ஐயமில்லை. சிறிய படங்களுக்கு சமமான இடம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ‘போர்த் ப்ளோர்’ மூலம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஆண் ஆதிக்கம் நிறைந்த சினிமாவில் ஒரு பெண்ணின் குரல்..! ஆனந்த கண்ணீருடன் நடிகை ராதிகா நெகிழ்ச்சி பேச்சு..!

    மேலும் படிங்க
    காங்கிரஸை கை கழுவும் திமுக... ஒரே வரியில் ராகுல் காந்திக்கு பிறந்தநாளில் ஸ்டாலின் அனுப்பிய ‘டாப் நாட்ச் மெசெஜ்’ ...!

    காங்கிரஸை கை கழுவும் திமுக... ஒரே வரியில் ராகுல் காந்திக்கு பிறந்தநாளில் ஸ்டாலின் அனுப்பிய ‘டாப் நாட்ச் மெசெஜ்’ ...!

    அரசியல்
    பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

    பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!

    உலகம்
    "CHICKEN POX"..! வீரியமெடுக்கும் சின்னம்மை நோய்... சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

    "CHICKEN POX"..! வீரியமெடுக்கும் சின்னம்மை நோய்... சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலின் உளவுப்படை தாக்குதலில் ஈரானின் உளவுப்பிரிவு தலைவர் கொலை!

    இஸ்ரேலின் உளவுப்படை தாக்குதலில் ஈரானின் உளவுப்பிரிவு தலைவர் கொலை!

    உலகம்
    மேட்டுப்பாளையம் இனி DMK கோட்டை..! விருப்ப மனு கொடுத்து சூளுரைத்த பெண்..!!

    மேட்டுப்பாளையம் இனி DMK கோட்டை..! விருப்ப மனு கொடுத்து சூளுரைத்த பெண்..!!

    தமிழ்நாடு
    பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!

    பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share