இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் தான் 'கூலி'. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இந்த திரைப்படம், ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் எலெமெண்ட்களை மையமாகக் கொண்டது. திரைப்படத்திற்காக இசையமைத்திருக்கிறார் அனிருத் ரவிச்சந்தர். படத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் ஒன்றிணைந்துள்ளனர். ரஜினியுடன் இணைந்து அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாஹிர், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படி இருக்க படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவுகளிலேயே ரூ.50 கோடி வசூலித்துள்ளது என்பது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வந்த தகவலாக உள்ளது. இது திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை பிரதிபலிக்கிறது. உலகளவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு நிலவும் பிரம்மாண்ட வரவேற்பை ‘கூலி’ நிரூபிக்க இருப்பது உறுதி. இந்த நிலையில், 'கூலி' திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்களும், ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் உருவாகி வருகின்றன.

இதைப் போலவே, சில இணையதள சேனல்கள், சினிமா பக்கங்கள் மற்றும் ரசிகர் குழுக்கள் சிவா கூலியில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் எனத் தகவல் பரப்பி வருகின்றனர். இதனால், ரசிகர்கள் ஏற்கனவே படத்திற்கு காத்திருக்கும் வேலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தகவலை சினிமா வட்டாரங்கள் முற்றிலுமாக மறுத்துள்ளன. கூலி திரைப்பட தயாரிப்பு குழுவின் நெருக்கமான வட்டாரங்களின்படி, சிவகார்த்திகேயன் ‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் உருவாகும் முன்பே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேண்டஸி ஜானரில், ரஜினிகாந்தை மையமாகக் கொண்டு ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம். அந்தக் கதைக்குள் தான் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்க இருந்ததாகவும், ஆனால் அந்த திட்டம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த திட்டம் நடக்கவில்லை என்பதற்கேற்ப, சிவகார்த்திகேயனும் ‘கூலி’ படத்தில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: “ஓ காட் பியூட்டிஃபுல்” பாடல் ப்ரோமோ...! சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றிய சுதாகர்..!
இதனால், சிலர் ஏமாற்றம் அடைந்தாலும், இது போல கிசுகிசு தகவல்களை உண்மை என நம்பாமல் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ரசிகர்களிடையே செய்திகள் பரவுகின்றன. மேலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே தங்களுக்கென தனித்துவமான ரசிகர் வட்டத்தை கொண்டவர்கள் என்பதால், அவர்களது கூட்டணியை எதிர்காலத்தில் ஒரு தனி படத்தில் காணும் ஆசை ரசிகர்களிடையே நிலவுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது சிக்னேச்சர் ஸ்டைலில், பிரம்மாண்டமான ஆக்ஷன் சினிமாவாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இப்படத்தை. மொத்தத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த கிசுகிசு செய்திகளால் சில நிமிடங்கள் உற்சாகமடைந்தாலும், அதிகாரப்பூர்வ மறுப்பின் பின்னர் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். ‘கூலி’ ஒரு நட்சத்திரங்களின் கூட்டணி மற்றும் ஆக்ஷன் விஷுவல்ஸ் கொண்ட மிகுந்த எதிர்பார்ப்பு படமாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இதுபோன்ற பெரிய திரைப்படங்களில் வரும் கேமியோ விஷயங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராதவரை நம்புவது சிக்கலாக இருக்கலாம். இருந்தாலும், ரஜினி, லோகேஷ் கூட்டணியின் இந்த 'கூலி' ரசிகர்களுக்கான ஒரு விழாக்கோலம் என்பது மட்டும் உறுதி.

சினிமா குறித்து உண்மை தகவல்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புங்கள். சந்தேகத்திற்கு இடமில்லாமல், ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் ‘கூலி’யை அனுபவிக்க தயாராகுங்கள் என சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் அனிருத்தின் பிடியில் ‘மதராஸி’..! வெளியானது பர்ஸ்ட் சிங்கிள் ‘சலம்பல’..!