இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா முதலானோர் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் தான் பராசக்தி. இப்படத்தில், மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பசில் ஜோசப் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவர். அவரும் இந்த படத்தில் நடிக்கிறார் என பலரும் கூற ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

இப்படி இருக்க, பராசக்தி படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருந்த வேளையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டவுன் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், சமீபத்தில் பராசக்தி படத்தின் போஸ்டரை பதிவு செய்து அதன்கீழ் "This Pongal" என குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்".. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!

ஆனால் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகும் அதே நாளில் நடிகர் விஜயின் சினிமா பயணத்தின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படும் "ஜனநாயகன்" திரைப்படமும் வெளியாக உள்ளது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு பின் பலசிக்கல்களை கடந்து இப்படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாவதிலேயே பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர், விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன். இதனால் பராசக்தி படப்பிடிப்பு நடக்குமா.. படம் வெளியாகுமா என்ற புதிய சிக்கலை சந்தித்து உள்ளது பராசக்தி டீம்.

இந்த நிலையில், பராசக்தி படப்பிடிப்பு குறித்து தனியார் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுதா கொங்கரா, "பராசக்தி படத்தில் 75% படப்பிடிப்புகள் முடிந்துள்ளது என்றும் இன்னும் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மீதமுள்ள இந்த காட்சிகளை சிவகார்த்திகேயன் 'மதராஸி' படப்பிடிப்பில் நடித்து வந்த பின் முடிக்கப்படும். நிறைய பேர் sk-வின் 'பராசக்தி' படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் என்று பேசுகிறீர்கள். ஆனால் அப்படி நாங்கள் சொல்லவே இல்லை. படம் எப்பொழுது ரிலீசாகும் என்ற முடிவை எல்லாம் தயாரிப்பாளர்கள் தான் எடுப்பார்கள் நாங்கள் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹிட் கொடுக்கும் இயக்குனர் லிஸ்டில் 'SK'..! பிரம்மாண்ட கதையில் இணையும் கூட்டணி..!