இன்று ஒரே நாளில் மக்களுக்கு மூன்று ட்ரீட்டுகள் கிடைத்து உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன்படி, நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்', நடிகர் யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' மற்றும் நடிகர் சூரியின் 'மாமன்' திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இவர்கள் மூவரும் திரையுலகில் மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இப்பொழுது இவர்கள் படத்தைக் குறித்து பேசும்பொழுது 'காமெடி 2 ஹீரோ' என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பார்த்தால், நடிகர் சந்தானத்தின் திரைப்படம் ஒரு பகுதியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதேபோல் நடிகர் சூரியன் படத்தை குறித்து பார்த்தால் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் இந்த 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி. கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சூரியின் முயற்சிக்கு ஒரு புறம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: நடிகர் சூரியுடன் நடக்க இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா..!

இப்படிப்பட்ட இந்த 'மாமன்' திரைப்படத்தின் கதை என பார்த்தால், இன்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு ஒரு அழகான அக்கா இருக்கிறார் அவரது பெயர் கிரிஜா. இந்த கிரிஜாவிற்கும் ரவிக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து உள்ளது. இதற்காக குழந்தை பாக்கியம் வேண்டி பல விரதங்களை மேற்கொள்கிறார் கிரிஜா. அந்தப் பத்து ஆண்டுகளும் தனது அக்காவை கைவிடாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களுக்காக பாடுபடும் பாசமிகுந்த தம்பியாக இருக்கிறார் இன்பா.
இப்படி இருக்க, ஒரு நாள் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் கிரிஜா அங்கு அவரைப் பார்த்த அவருடைய மாமியார், உனக்கு இன்னும் குழந்தை பாக்கியமே இல்லை நீ எதற்கு இங்கு வந்தாய் என்று கூறி அவரை கரித்துக் கொட்ட, அவர் மீது திடீரென வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. வாந்தி எடுத்த மருமகளை கோபமாக பார்த்த மாமியார், அவள் மாசமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் அந்த கோபம் தணிந்து அவரை அன்புடன் அரவணைக்கும் காட்சிகள் நன்றாகவே இருந்தது.

10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் பெற்ற தனது அக்காவை நலமுடன் பார்த்துக் கொள்ளும் தம்பி இன்பா, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் 'என்னை பெற்றாரே' என சொல்லி அழுவது போன்ற காட்சிகள் பாசத்தின் உச்சமாகவே இருந்தது என்றே சொல்லலாம். அதே போல் ஹீரோவை சந்திக்கும் ஹீரோயின் காட்சிகள் எல்லாம் வழக்கம்போல் உள்ள கதைகளை போலவே இருந்தது. ஏனெனில் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தான் மருத்துவர் அவர் கவனிப்பில் தான் இன்பாவின் அக்காவிற்கு குழந்தை பிறக்கிறது. அங்கு சூரி தனது அக்காவின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு இம்பிரஸ் ஆகும் ஐஸ்வர்யா, இந்த காலத்திலேயும் பெண்களை மதிக்க கூடிய பையனா என சூரியின் மீது தன் கண்களை வைக்கிறார்.

திடீரென அக்காவிற்கு பிரசவிக்கும் நேரத்தில் தொப்புள் கொடி குழந்தையை சுற்றி இருக்கிறது என்று சொல்ல, இது தாய் மாமனுக்கு ஆபத்து என ஊரே பேச, ஐஸ்வர்யா லட்சுமி இதெல்லாம் மூடப்பழக்கம் இதை நம்பாதீங்க என சொல்லி இன்பாவை ஆறுதல் படுத்தி அழைத்து செல்வார். பின்பு குழந்தை பிறந்தவுடன் பாசத்தின் மிகுதியில் அக்காவின் கணவரை தள்ளிவிட்டு முதன்முதலாக அந்த குழந்தையை கையில் ஏந்தும் காட்சிகள் எல்லாம் நன்றாகவே இருந்தது.

குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காண்பித்து குழந்தையுடன் சூரி செய்யும் அட்டகாசத்தையும் காண்பிக்கின்றனர். இதன் பின்பு தான் கதையில் பிரச்சனையே ஆரம்பமாகிறது. சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் ஆக, இதுவரை மாமனுடன் மட்டுமே இருந்த அக்காவின் மகன் நான் சூரி உடன் தான் இருப்பேன் என அடம் பிடிப்பதும் அவருடன்தான் தூங்குவேன் என அடம் பிடிப்பது எல்லாம் பெரிய பிரச்சனையாக மாறி சூரியனுடைய வாழ்க்கைக்கு பாதகமாக முடிகிறது. இதனால் அக்கா தம்பி உறவுக்குள் மிகப்பெரிய விரிசல் வர, கடைசியில் அக்கா தம்பி இருவரும் சேருவார்களா? மாட்டார்களா? என்பதை கதையாக வைத்துள்ளனர்.

ஆக இப்படத்தின் பிளஸ் என பார்த்தால், உறவுமுறைகளில் எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் பிரச்சனை என்று வரும் பொழுது முதலில் அந்த உறவுகளுக்கு தான் வலிக்கும் என்பதை காண்பித்து இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாக்யராஜ். மேலும், தனது தம்பி-யினுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மாமனையும் மருமகனையும் பிரிக்க இன்பாவின் அக்கா செய்யும் காட்சிகள் அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாகவே இருந்தது என்று சொல்லலாம். ஆனால் படத்தில் சில மைனஸ்கள் என பார்த்தால் படம் சென்டிமென்டில் அந்த அளவுக்கு பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்.

மேலும், மாமனை பற்றி அக்கா தன் மகனிடம் எடுத்துச் செல்லும் பொழுது மகன் திருந்துவதும் அவ்வளவு பெரிய காட்சிகளாக தோன்றவில்லை. காமெடி நடிகரான சூரி இப்படத்தில் காமெடிகளை வைக்க ஏன் தவறினார் எனவும் படத்தில் சண்டை காட்சிகளை வைக்க வேண்டும் என்பதற்காகவே வைத்ததை போல் இருந்தது எனவும் பாசத்தை கொஞ்சம் அதிகமாகவே காமித்து விட்டாரோ எனவும் மக்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் வெளியாகும் 3 காமெடி ஹீரோக்களின் திரைப்படம்..! மே16ம் தேதிக்காக ஆவலுடன் ரசிகர்கள்..!