தமிழ் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இவர் நடித்த படங்களில் "டாக்கு மகாராஜ்" படத்தில் நடித்ததற்காக பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவரை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள காரணமானவர் ஒருவர் உண்டு. லெஜெண்ட் சரவணனை அனைவரும் பார்த்து இருக்க முடியும். சரவணா ஸ்டார் பாத்திர கடை, சரவணா ஸ்டார் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ், சரவணா ஸ்டார் தங்க மாளிகை என பல கடைகளுக்கு சொந்தக்காரர் தான் லெஜெண்ட் சரவணன். இவர் தினமும் கடைக்கு தனி ரக விலையுயர்ந்த காரில் செல்பவர்.

அப்படிப்பட்ட லெஜெண்ட் சரவணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டவர் தான் ஊர்வசி ரவுத்தேலா. இப்படிப்பட்ட இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பின் விளக்கம் கொடுப்பதும் வழக்கம். சமீபத்தில் பாபி இயக்கத்தில் பாலையா நடிப்பில் வெளியான ‘டாக்கூ மஹாராஜ்’ என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார் ஊர்வசி. அது பிரச்சனை அல்ல.
இந்த படம் வெளியான பின் அதன் வெற்றியை கொண்டாட நடைபெற்ற பார்ட்டியில் பாலையா - ஊர்வசி ரவுதெலா இருவரும் அதே மாதிரி நெருக்கமாக நடனமாடினார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கும் பதிலளித்த அவர், பாலையா ஒரு சிறந்த நடிகர் அவருடன் பணிபுரிந்ததை நான் மதிக்கிறேன். அவருடன் பழகுவதை கொச்சையாக பேசாதீர்கள் என அந்த சர்சசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: ரஜினியை போல் பேக் அடிக்கிறாரா விஜய்..! கசிந்த ரகசியம்.. ரசிகர்கள் ஹேப்பி.. தொண்டர்கள் அதிர்ச்சி..!

இவர் எதை செய்வதாக இருந்தாலும் அதனை சற்று வித்தியாசமாகவும் விமர்சையாகவும் செய்ய நினைப்பவர் ஆதலால் இவர் இந்தியாவில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்னவெனில், ஊர்வசி ரவ்துலா தனக்கென புது "ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை" வாங்கி, இந்திய நடிகைகளில் முதலில் "ரோல்ஸ் ராய்ஸ் காரை" வாங்கிய பெருமையை அடைந்தார். இந்த அல்ட்ரா சொகுசு காருக்காக 12 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கி இருந்தார். இப்படி பல புகழுக்கு சொந்தக்காரியான ஊர்வசி, கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பலரது கவனத்தையும் ஈர்த்த நிகழ்ச்சி எனலாம். இதில் போடப்பட்டிருக்கும் சிகப்பு கம்பளத்தில் நடப்பவர்கள் தான் மிகப்பெரிய ஸ்டாராக பார்க்கப்படுவர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் 24ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்த முறையும் இந்திய பாலிவுட் நடிகர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்த நடிகர் ஷாரூக்கானிடம் நீங்கள் யார் என நிருபர்கள் கேட்க, அவர் சற்றும் அலட்டி கொள்ளாமல் நான்தான் ஷாருக்கான் பாலிவுட் ஆக்டர் என சொல்லி சென்றார். இது பரவலாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா, விதவிதமான வண்ணங்களில் அல்ட்ரா கவர்ச்சியில் ஸ்டைல் லுக்கில் கையில் ஒரு பறவையை பிடித்திருந்த படி சிகப்பு கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: அப்பா டைரக்டர் புள்ள ரவுடி.. சாமானியனை அடித்து போலீஸிடம் சிக்கிய இயக்குனரின் மகன்..!